அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் பரீட்சார்த்திகளிடமிருந்து சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபமாக ஈட்டியுள்ளதான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த முறை பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளிடம் இருந்து பரீட்சைக் கட்டணமாக சுமார் 2,700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் உட்பட 1 இலட்சத்து 50,000 க்கும் மேற்பட்டோர் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதன் மூலம் பரீட்சைக் கட்டணமாக மட்டும் மொத்தம் 44 கோடி 21 இலட்சத்துக்கும் அதிக தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்களில் 23,000 பேர் என்ற வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினரே ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
கடந்த காலங்களில் இப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒரு வினாத்தாள்களும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேறொரு வினாத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள்கள் தயாரிப்பில் அரசாங்கம் பாரிய சமநிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.
மேலும், பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் உள்ள சில வினாக்கள் தீர்ப்பதற்கு மிகவும் கடினமானதாக அமைந்திருந்தன. ஆனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மிகவும் இலகுவாக விடையளிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த காலங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைவிடப்பட்டது. எனவே அவர்களுக்கு ஏதேனும் ஒரு சலுகையை வழங்குவதற்காக ஆசிரியர் பரீட்சை வினாத்தாள்களில் இவ்வாறான நெகிழ்வான போக்கு கடைப்பிடிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.
அனைத்து பரீட்சார்த்திகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும் ஒரே பரீட்சைக்கு 2 வெவ்வேறு வினாத்தாள்கள்களை வழங்கியமை வேலையற்ற பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும் என்றார்.
ஆசிரியர் பரீட்சையில் அநீதி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்கியதா அரசு - தயாசிறி சுட்டிக்காட்டு அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் பரீட்சார்த்திகளிடமிருந்து சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபமாக ஈட்டியுள்ளதான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த முறை பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளிடம் இருந்து பரீட்சைக் கட்டணமாக சுமார் 2,700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் உட்பட 1 இலட்சத்து 50,000 க்கும் மேற்பட்டோர் இப்பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர். இதன் மூலம் பரீட்சைக் கட்டணமாக மட்டும் மொத்தம் 44 கோடி 21 இலட்சத்துக்கும் அதிக தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. எனினும் இவர்களில் 23,000 பேர் என்ற வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினரே ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.கடந்த காலங்களில் இப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒரு வினாத்தாள்களும், வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேறொரு வினாத்தாளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள்கள் தயாரிப்பில் அரசாங்கம் பாரிய சமநிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. மேலும், பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களில் உள்ள சில வினாக்கள் தீர்ப்பதற்கு மிகவும் கடினமானதாக அமைந்திருந்தன. ஆனால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்கள் மிகவும் இலகுவாக விடையளிக்கக் கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் ஜனாதிபதியின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கைவிடப்பட்டது. எனவே அவர்களுக்கு ஏதேனும் ஒரு சலுகையை வழங்குவதற்காக ஆசிரியர் பரீட்சை வினாத்தாள்களில் இவ்வாறான நெகிழ்வான போக்கு கடைப்பிடிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.அனைத்து பரீட்சார்த்திகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும் ஒரே பரீட்சைக்கு 2 வெவ்வேறு வினாத்தாள்கள்களை வழங்கியமை வேலையற்ற பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும் என்றார்.