• May 21 2026

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட பணிகள்; துப்புரவுப் பணிகளில் துப்பாக்கிரவைகள் மீட்பு!

shanu / Sep 22nd 2025, 7:02 pm
image

யாழ்.மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட பணியின்  போது துப்பாக்கி ரவைகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில்  நேற்றுமுன்தினம் (20) T-56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. 


இதனையடுத்து இது தொடர்பில் ஊர்காவற்றுறை  பொலிஸாருக்கு தகவல்  வழங்கப்பட்டது. தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 


பின்னர் துப்பாக்கி ரவைகளை மீட்பது  தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்  நேற்று (21) அனுமதியை கோரியதற்கிணங்க   ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று காலை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன. 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட பணிகள்; துப்புரவுப் பணிகளில் துப்பாக்கிரவைகள் மீட்பு யாழ்.மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பகட்ட பணியின்  போது துப்பாக்கி ரவைகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டைதீவுப் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக் கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில்  நேற்றுமுன்தினம் (20) T-56 ரக துப்பாக்கி ரவைகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து இது தொடர்பில் ஊர்காவற்றுறை  பொலிஸாருக்கு தகவல்  வழங்கப்பட்டது. தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். பின்னர் துப்பாக்கி ரவைகளை மீட்பது  தொடர்பாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில்  நேற்று (21) அனுமதியை கோரியதற்கிணங்க   ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவிற்கமைய இன்று காலை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement