தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.
கடந்த ஜூலை மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்கம் 0.7% ஆக காணப்பட்ட நிலையில், அது ஓகஸ்ட் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஜூலையில் 2.2% ஆக இருந்த நிலையில், ஓகஸ்ட்டில் 2.9% ஆக அதிகரித்துள்ளது.
உணவு அல்லாத பிரிவுகளின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் ஜூலையில் -0.6% ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 0.4% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஓகஸ்டில் பணவீக்கம் அதிகரிப்பு தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் இதனைத் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) அடிப்படையிலான ஒட்டுமொத்த பணவீக்கம் 0.7% ஆக காணப்பட்ட நிலையில், அது ஓகஸ்ட் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஜூலையில் 2.2% ஆக இருந்த நிலையில், ஓகஸ்ட்டில் 2.9% ஆக அதிகரித்துள்ளது. உணவு அல்லாத பிரிவுகளின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் ஜூலையில் -0.6% ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 0.4% ஆக அதிகரித்துள்ளது.