• Jun 27 2026

நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்கள்; பதில் கூற அமைச்சர்கள் எங்கே? - சபையில் எதிர்க்கட்சி விசனம்

Chithra / Jun 26th 2026, 1:58 pm
image


நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த அரசாங்கத்தின் பதிலைப் பெற சுகாதார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சபையில் இல்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சுட்டிக்காட்டினார்.


நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. பதிலளிக்க எந்த அமைச்சரும் இல்லை, பதில் கூற வேண்டிய பொறுப்பு தற்காலிக சபை முதல்வரிடம் மட்டுமே உள்ளது என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.


இதற்குப் பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க , நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பதில்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.


அமைச்சரவை சார்ந்த அமைச்சர்கள் சபையில் இல்லாதது மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து உறுப்பினர்களுக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது


இதேவேளை நாட்டில் 49000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


தற்போதைய நிலவரப்படி நாட்டில் 49,000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 25,000 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த விடயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.


அரசாங்கம் சமர்ப்பித்துள்ள நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான அறிக்கை குறித்து தமக்கு முரண்பட்ட கருத்துகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். வரிச்சுமைகளை மக்கள் மீது சுமத்தி, நலன்புரிச் செலவுகள் மற்றும் மூலதனச் செலவுகளைக் குறைத்தே இந்த நிதி இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.


சமர்ப்பிக்கப்பட்ட நிதி அறிக்கை தொடர்பில் விரிவான நாடாளுமன்ற விவாதம் ஒன்று அவசியமென அவர் கோரிக்கை விடுத்தார்.மேலும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பிலும், நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் அவர் தனது கருத்துகளை முன்வைத்தார்.

நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்கள்; பதில் கூற அமைச்சர்கள் எங்கே - சபையில் எதிர்க்கட்சி விசனம் நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த அரசாங்கத்தின் பதிலைப் பெற சுகாதார அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் சபையில் இல்லை என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர சுட்டிக்காட்டினார்.நாட்டில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. பதிலளிக்க எந்த அமைச்சரும் இல்லை, பதில் கூற வேண்டிய பொறுப்பு தற்காலிக சபை முதல்வரிடம் மட்டுமே உள்ளது என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.இதற்குப் பதிலளித்த வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க , நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமைய, குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் பதில்களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.அமைச்சரவை சார்ந்த அமைச்சர்கள் சபையில் இல்லாதது மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து உறுப்பினர்களுக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுஇதேவேளை நாட்டில் 49000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தற்போதைய நிலவரப்படி நாட்டில் 49,000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 25,000 பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்த விடயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.அரசாங்கம் சமர்ப்பித்துள்ள நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான அறிக்கை குறித்து தமக்கு முரண்பட்ட கருத்துகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். வரிச்சுமைகளை மக்கள் மீது சுமத்தி, நலன்புரிச் செலவுகள் மற்றும் மூலதனச் செலவுகளைக் குறைத்தே இந்த நிதி இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.சமர்ப்பிக்கப்பட்ட நிதி அறிக்கை தொடர்பில் விரிவான நாடாளுமன்ற விவாதம் ஒன்று அவசியமென அவர் கோரிக்கை விடுத்தார்.மேலும், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவது தொடர்பிலும், நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்தும் அவர் தனது கருத்துகளை முன்வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement