பிரதான சுற்றுலாத் தலங்களை அண்மித்த பகுதிகளில் சீருடை அணிந்த மற்றும் சிவில் உடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான வூட்லர்,
சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பல பகுதிகளில் சிவில் உடையில் உள்ள அதிகாரிகள் ஏற்கனவே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
அதேபோல், சுற்றுலா பொலிஸ் பிரிவின் சீருடை அணிந்த அதிகாரிகளும் அந்தப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஒவ்வொரு சுற்றுலாத் தலத்திலும் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
எனவே, சுற்றுலாப் பயணிகள் எந்த நேரத்திலும் முறைப்பாடுகளைச் செய்யவும், உதவிகளைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, அண்மையில் வெளிநாட்டுப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இரண்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலாத் தலங்களில் அதிகரிக்கும் பாதுகாப்பு பிரதான சுற்றுலாத் தலங்களை அண்மித்த பகுதிகளில் சீருடை அணிந்த மற்றும் சிவில் உடையில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான வூட்லர், சுற்றுலாப் பயணிகள் நடமாடும் பல பகுதிகளில் சிவில் உடையில் உள்ள அதிகாரிகள் ஏற்கனவே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். அதேபோல், சுற்றுலா பொலிஸ் பிரிவின் சீருடை அணிந்த அதிகாரிகளும் அந்தப் பகுதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், ஒவ்வொரு சுற்றுலாத் தலத்திலும் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. எனவே, சுற்றுலாப் பயணிகள் எந்த நேரத்திலும் முறைப்பாடுகளைச் செய்யவும், உதவிகளைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, அண்மையில் வெளிநாட்டுப் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த இரண்டு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.