• May 06 2026

மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணக்கை அதிகரிப்பு - ஆரம்பிக்கப்பட்ட சோதனை நடவடிக்கை

Chithra / Dec 8th 2025, 2:21 pm
image

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டு சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த வாரம் 02 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.


ஒவ்வொரு மாதமும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து இன்றிலிருந்து தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளது.


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான நிகழ்வாக இன்றைய தினம் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு அணியினர், பொலிஸார் என பலர் கலந்துகொண்டனர்.


மழை வெள்ளம் காரணமாக டெங்கு நோய் தாக்கத்தினை தடுக்கும் வகையில் கடந்தவாரம் வீடுகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதன் அடுத்தகட்டமாக சுற்றுசூழலில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.


மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணக்கை அதிகரிப்பு - ஆரம்பிக்கப்பட்ட சோதனை நடவடிக்கை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டு சுமார் 270க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த வாரம் 02 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து இன்றிலிருந்து தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை பிரகடனப்படுத்தி டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை இன்று ஆரம்பித்துள்ளது.தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான நிகழ்வாக இன்றைய தினம் வெட்டுக்காடு பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு அணியினர், பொலிஸார் என பலர் கலந்துகொண்டனர்.மழை வெள்ளம் காரணமாக டெங்கு நோய் தாக்கத்தினை தடுக்கும் வகையில் கடந்தவாரம் வீடுகளை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதன் அடுத்தகட்டமாக சுற்றுசூழலில் டெங்கு நுளம்பின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சிலருக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement