• May 18 2026

ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் சிறுநீரக நோயாளர் அதிகரிப்பு

Aathira / Jan 10th 2026, 1:27 pm
image

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுவரை 11 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பாக பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் புதன்கிழமை (7) இடம்பெற்ற  சபையின் மாதாந்த அமர்வில் பேசும் போது தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்,

மலையகத்தில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் 11 பேர் இறந்துள்ளதாகவும், இதற்கு அசுத்தமான குடிநீரைப் பருகுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே, பொது சுகாதாரப் பரிசோதகர்களைக் கொண்டு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அண்மையில் கூட 28  மற்றும்  35 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. 

இது சம்பந்தமாக இந்த வட்டாரத்தின் மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் மருத்துவ வைத்திய அதிகாரி (MOH) மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) ஆகியவற்றுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.

மேலும் கொட்டகலை அமைதிபுரத்தில் உள்ள பாதை ஒன்று  யாருக்கு சொந்தம் என்பதில் இன முறுகல் ஏற்படக் கூடிய அச்சம் காணப்படுகின்றது. 

அங்குள்ள பிரதேசவாசிக்கா அல்லது புகையிரத திணைக்களத்துக்கா உரித்தானது  என்பதை அளவீட்டின் மூலம் கண்டறிந்து சுமுகமான நிலையை ஏற்படுத்தி பாதையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.  

கொட்டகலை நகரில் “தங்கக் கடன் என்ற பெயரில் தனி நபர் ஒருவர் இலட்சக் கணக்கான ரூபாவை மக்களிடமிருந்து மோசடி செய்துள்ளதாகவும்,  நகைகளை மீட்பதற்காக கொடுக்கப்பட்ட இலட்சக் கணக்கான பணத்தோடு குறித்த நபர் தலைமறைவாகிவிட்டதாகவும் இதுவரை 1720 பேரின் நகைகள் அடைவு பிடிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு எதிர்காலத்தில் இத்தகைய விடயங்களுக்கு பிரதேச சபை அனுமதி வழங்கும் போது, சரியான முறையில் பரிசீலனை மேற்கொண்டு வழங்க வேண்டும்.

கொட்டகலை நகரில் உள்ள மதுபானசாலைகள் காலை நேரத்திலேயே திறக்கப்பட்டு விடுகின்றன. சில நேரங்களில் அடிபிடி சண்டைகள் உட்பட பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. 

ஆகவே, கலால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு  மாலை நேரங்களில் திறப்பதற்கு பிரதேச சபைத் தலைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் சிறுநீரக நோயாளர் அதிகரிப்பு கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதுவரை 11 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக பிரதேச சபை ஊடாக நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் புஷ்பா விஸ்வநாதன் புதன்கிழமை (7) இடம்பெற்ற  சபையின் மாதாந்த அமர்வில் பேசும் போது தெரிவித்தார்.அவர் மேலும் பேசுகையில்,மலையகத்தில் சிறுநீரக நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஸ்டொனிகிளிப் தோட்டத்தில் 11 பேர் இறந்துள்ளதாகவும், இதற்கு அசுத்தமான குடிநீரைப் பருகுவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. எனவே, பொது சுகாதாரப் பரிசோதகர்களைக் கொண்டு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் கூட 28  மற்றும்  35 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இது சம்பந்தமாக இந்த வட்டாரத்தின் மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் மருத்துவ வைத்திய அதிகாரி (MOH) மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) ஆகியவற்றுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளேன்.மேலும் கொட்டகலை அமைதிபுரத்தில் உள்ள பாதை ஒன்று  யாருக்கு சொந்தம் என்பதில் இன முறுகல் ஏற்படக் கூடிய அச்சம் காணப்படுகின்றது. அங்குள்ள பிரதேசவாசிக்கா அல்லது புகையிரத திணைக்களத்துக்கா உரித்தானது  என்பதை அளவீட்டின் மூலம் கண்டறிந்து சுமுகமான நிலையை ஏற்படுத்தி பாதையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.  கொட்டகலை நகரில் “தங்கக் கடன் என்ற பெயரில் தனி நபர் ஒருவர் இலட்சக் கணக்கான ரூபாவை மக்களிடமிருந்து மோசடி செய்துள்ளதாகவும்,  நகைகளை மீட்பதற்காக கொடுக்கப்பட்ட இலட்சக் கணக்கான பணத்தோடு குறித்த நபர் தலைமறைவாகிவிட்டதாகவும் இதுவரை 1720 பேரின் நகைகள் அடைவு பிடிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தி வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு எதிர்காலத்தில் இத்தகைய விடயங்களுக்கு பிரதேச சபை அனுமதி வழங்கும் போது, சரியான முறையில் பரிசீலனை மேற்கொண்டு வழங்க வேண்டும்.கொட்டகலை நகரில் உள்ள மதுபானசாலைகள் காலை நேரத்திலேயே திறக்கப்பட்டு விடுகின்றன. சில நேரங்களில் அடிபிடி சண்டைகள் உட்பட பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகிறது. ஆகவே, கலால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு  மாலை நேரங்களில் திறப்பதற்கு பிரதேச சபைத் தலைவர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement