இலங்கையில் முட்டை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதன் காரணமாக, சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, சந்தை நிலவரம் குறித்து விளக்கமளித்தார்.
அவர் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது முட்டை உற்பத்தி மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தத் தொடர்ச்சியான உற்பத்தி அதிகரிப்பே சந்தையில் முட்டை விலை குறைவடைவதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
உள்நாட்டு உற்பத்தித் திறன் மேம்பட்டுள்ளதால், எதிர்வரும் காலங்களிலும் முட்டை தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் நுகர்வோருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மைக்காலம் வரை முட்டை விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு, இந்த விலை வீழ்ச்சி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றமானது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இலங்கையில் முட்டை உற்பத்தி அதிகரிப்பு: சந்தையில் முட்டை விலை வீழ்ச்சி இலங்கையில் முட்டை உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளதன் காரணமாக, சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, சந்தை நிலவரம் குறித்து விளக்கமளித்தார்.அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது முட்டை உற்பத்தி மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தத் தொடர்ச்சியான உற்பத்தி அதிகரிப்பே சந்தையில் முட்டை விலை குறைவடைவதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.உள்நாட்டு உற்பத்தித் திறன் மேம்பட்டுள்ளதால், எதிர்வரும் காலங்களிலும் முட்டை தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் நுகர்வோருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைக்காலம் வரை முட்டை விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு, இந்த விலை வீழ்ச்சி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.உற்பத்தி அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றமானது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.