• Jun 04 2026

தோப்பூர் -அல்லைநகர் கிராமோதய சுகாதார மத்திய நிலைய புதிய கட்டிடத் திறப்புவிழா!

Ziya / Jun 3rd 2026, 3:53 pm
image

திருகோணமலை ,தோப்பூர் -அல்லைநகர் கிராமோதய சுகாதார மத்திய நிலைய புதிய கட்டிடத் திறப்புவிழா  மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம்.ஹஸ்ஸாலி தலைமையில் இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது.


கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதியுதவியின் மூலம் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக் கட்டிடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.


இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு சுகாதார மருத்துவ மாது திருமதி சுறைபா நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.


புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் தோப்பூர் -அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த கற்பணித் தாய்மார்கள்,பாலூட்டும் தாய்மார்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,மருத்துவ மாதுக்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரஜா சக்தி உறுப்பினர்கள்,பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   


தோப்பூர் -அல்லைநகர் கிராமோதய சுகாதார மத்திய நிலைய புதிய கட்டிடத் திறப்புவிழா திருகோணமலை ,தோப்பூர் -அல்லைநகர் கிராமோதய சுகாதார மத்திய நிலைய புதிய கட்டிடத் திறப்புவிழா  மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி என்.எம்.ஹஸ்ஸாலி தலைமையில் இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது.கிழக்கு மாகாண விசேட அபிவிருத்தி திட்ட நிதியுதவியின் மூலம் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இக் கட்டிடம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு சுகாதார மருத்துவ மாது திருமதி சுறைபா நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் தோப்பூர் -அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த கற்பணித் தாய்மார்கள்,பாலூட்டும் தாய்மார்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிகழ்வில் சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி,மூதூர் பிரதேச சபையின் செயலாளர் ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள்,மருத்துவ மாதுக்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரஜா சக்தி உறுப்பினர்கள்,பிரதேச முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement