வவுனியா மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 63,235 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க. விமலரூபன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்திலுள்ள 09 கமநல சேவை நிலையங்களின் கீழ் இந்த நெற்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாயிகளின் நெற்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான உரங்கள், விதைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக வவுனியா மாவட்டத்திலுள்ள 09 கமநல சேவை நிலையங்களும் முழுவீச்சில் செயற்பட்டு வருவதுடன், விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை விரைவாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் நிலவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இம்முறை பெரும்போகத்தில் சிறந்த விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் விவசாயிகள் செயற்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், மாவட்டத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகள் தற்போது நிலத்தைப் பண்படுத்துதல் மற்றும் விதைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் 63,235 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை – விவசாயப் பணிகள் தீவிரம் வவுனியா மாவட்டத்தில் இம்முறை பெரும்போகத்தில் 63,235 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க. விமலரூபன் தெரிவித்துள்ளார்.மாவட்டத்திலுள்ள 09 கமநல சேவை நிலையங்களின் கீழ் இந்த நெற்செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.விவசாயிகளின் நெற்செய்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குத் தேவையான உரங்கள், விதைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்காக வவுனியா மாவட்டத்திலுள்ள 09 கமநல சேவை நிலையங்களும் முழுவீச்சில் செயற்பட்டு வருவதுடன், விவசாயிகளுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை விரைவாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த காலங்களில் நிலவிய காலநிலை மாற்றங்கள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், இம்முறை பெரும்போகத்தில் சிறந்த விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்புடன் விவசாயிகள் செயற்பட்டு வருகின்றனர்.அந்தவகையில், மாவட்டத்தின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகள் தற்போது நிலத்தைப் பண்படுத்துதல் மற்றும் விதைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.