• Jul 03 2026

CM விஜய் -தமிழ்த்தேசியப் பேரவை இடையே இன்று முக்கிய சந்திப்பு!

shanu / Jul 3rd 2026, 8:34 pm
image

ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்த்தேசியப் பேரவை இடையே இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 


தமிழ்த்தேசியப் பேரவையினர், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை இன்று உத்தியோகபூர்வமாக சந்தித்தனர். 


வடக்கு, கிழக்கு  ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக தமிழ்த் தேசியப் பேரவை விளங்குகின்ற நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 


சந்திப்பின் போது ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.


விரிவான கலந்துரையாடலின் பின்னர் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றையும் முதலமைச்சரிடம் கையளித்துள்ளனர். 


குறித்த சந்திப்பில், ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழு கலந்துகொண்டது.


தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி,கே.வி.தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ்,  சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர். 


தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர்  தமிழ்த்தேசியப் பேரவை முதல் முதலாக இன்று அவரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் மூலமாவது ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா? என்றவாவறாக பலரும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.  

CM விஜய் -தமிழ்த்தேசியப் பேரவை இடையே இன்று முக்கிய சந்திப்பு ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்த்தேசியப் பேரவை இடையே இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழ்த்தேசியப் பேரவையினர், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயை இன்று உத்தியோகபூர்வமாக சந்தித்தனர். வடக்கு, கிழக்கு  ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் தரப்புகளில் முக்கிய அரசியல் கூட்டமைப்பாக தமிழ்த் தேசியப் பேரவை விளங்குகின்ற நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பின் போது ஈழத்தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்பட்டு தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், ஈழத்தமிழர் இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–ஈழத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.விரிவான கலந்துரையாடலின் பின்னர் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி எழுத்துமூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றையும் முதலமைச்சரிடம் கையளித்துள்ளனர். குறித்த சந்திப்பில், ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு பேர் கொண்ட பிரதிநிதிக் குழு கலந்துகொண்டது.தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், ஜனாதிபதி சட்டத்தரணி,கே.வி.தவராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஷ், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ்,  சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பின்னர்  தமிழ்த்தேசியப் பேரவை முதல் முதலாக இன்று அவரை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் மூலமாவது ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்றவாவறாக பலரும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement