• Apr 26 2026

மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வு; வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் - பலர் கைது

Chithra / Apr 26th 2026, 11:14 am
image

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.


இதன்போது அனுமதிப்பத்திரமின்றி பரவிபாஞ்சான் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அதேவேளை மூதூர் -மணற்சேனை பகுதியில் உள்ள காணியொன்றில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிய 4 உழவு இயந்திரங்கள், ரோலர் இயந்திரமும் மூதூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர். 


மேலும் டிப்பர் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டது.


கைது செய்யப்பட்ட வாகனச் சாரதிகளை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  


மூதூரில் சட்டவிரோத மணல் அகழ்வு; வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் - பலர் கைது திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளும் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது அனுமதிப்பத்திரமின்றி பரவிபாஞ்சான் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை மூதூர் -மணற்சேனை பகுதியில் உள்ள காணியொன்றில் அனுமதிப்பத்திரமின்றி மண் ஏற்றிய 4 உழவு இயந்திரங்கள், ரோலர் இயந்திரமும் மூதூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும் டிப்பர் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டது.கைது செய்யப்பட்ட வாகனச் சாரதிகளை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement