ஓமான் கடற்பரப்பில் 'எம்டி மரிவெக்ஸ்' (MT Marivex) கப்பல் மீது நடத்தப்பட்ட திடீர் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, மும்பை மத்திய பேரிடர் மீட்புக் கழகம் (MRCC - Mumbai) மிக விரைவாகச் செயல்பட்டு அசுர வேக மீட்புப் பணியை ஒருங்கிணைத்துள்ளது.
தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த உடனே களத்தில் குதித்த மும்பை MRCC, ஓமான் கடலோரக் காவல்படை மற்றும் ஓமான் கடற்படை ஹெலிகாப்டர்களுடன் (OmanSRR) அவசரமாகத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை முடக்கிவிட்டது.
இந்த அதிவேக சர்வதேச கூட்டு இராஜதந்திர மற்றும் ராணுவ ஒருங்கிணைப்பின் விளைவாக, பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் ஓமான் கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் எவ்வித காயமுமின்றி பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.
வளைகுடா பிராந்தியத்தில் ஏவுகணை மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்த மீட்பு நடவடிக்கை பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமான் கடற்பரப்பில் கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை- 24 இந்திய மாலுமிகள் மீட்பு ஓமான் கடற்பரப்பில் 'எம்டி மரிவெக்ஸ்' (MT Marivex) கப்பல் மீது நடத்தப்பட்ட திடீர் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, மும்பை மத்திய பேரிடர் மீட்புக் கழகம் (MRCC - Mumbai) மிக விரைவாகச் செயல்பட்டு அசுர வேக மீட்புப் பணியை ஒருங்கிணைத்துள்ளது.தாக்குதல் குறித்த தகவல் கிடைத்த உடனே களத்தில் குதித்த மும்பை MRCC, ஓமான் கடலோரக் காவல்படை மற்றும் ஓமான் கடற்படை ஹெலிகாப்டர்களுடன் (OmanSRR) அவசரமாகத் தொடர்புகொண்டு மீட்பு நடவடிக்கைகளை முடக்கிவிட்டது.இந்த அதிவேக சர்வதேச கூட்டு இராஜதந்திர மற்றும் ராணுவ ஒருங்கிணைப்பின் விளைவாக, பாதிக்கப்பட்ட கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளும் ஓமான் கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் எவ்வித காயமுமின்றி பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் மீட்கப்பட்டுள்ளனர். வளைகுடா பிராந்தியத்தில் ஏவுகணை மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில், இந்த மீட்பு நடவடிக்கை பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.