• May 03 2026

சம்பூர் சூடக்குடா கடலில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடி; கிண்ணியா மீனவர்கள் 13 பேர் கைது!

shanu / Sep 25th 2025, 10:30 am
image

திருகோணமலை - சம்பூர் சூடக்குடா கடலில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் சம்பூர் -பரக்கும்பா கடற்படையினரால் நேற்று (24) கைது செய்யப்படுள்ளனர்.


கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இதன்போது சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களுடன் 03 படகுகள் மற்றும் சட்டவிரோத சுருக்கு வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட மீனவர்கள் மூதூர், கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.


சம்பூர் சூடக்குடா கடலில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடி; கிண்ணியா மீனவர்கள் 13 பேர் கைது திருகோணமலை - சம்பூர் சூடக்குடா கடலில் சட்டவிரோத சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் சம்பூர் -பரக்கும்பா கடற்படையினரால் நேற்று (24) கைது செய்யப்படுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.இதன்போது சுருக்குவலை மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்களுடன் 03 படகுகள் மற்றும் சட்டவிரோத சுருக்கு வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட மீனவர்கள் மூதூர், கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஒக்டோபர் மாதம் 02 ஆம் திகதி மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement