• May 21 2026

முல்லைத்தீவு சுற்றுலா தளத்தில் சட்ட விரோத செயற்பாடு; ரவிகரன் எம்.பி உடனடி நடவடிக்கை!

Ziya / Dec 5th 2025, 4:22 pm
image

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில்  மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர்.

இந் நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ஞ்ச கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில்  மீனவர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் கடற்கரையில் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில்   கிடைத்த முறைப்பாட்டையடுத்து,  குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆராய்ந்தார்.

இதன்போது புலிபாய்ஞ்சகல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில்  சட்டவிரோதமாக மீனவர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பதுடன்  OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய  முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இரு படகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமான வகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில்  மீனவர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை  இனங்காண முடிந்துள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணிஉத்தியோகத்தர்,பிரதேச செயலாளர்  ஆகியோருக்கு  சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்  தெரிவிக்கப்பட்டது.

அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல்  பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான  செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் , குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய வகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.



முல்லைத்தீவு சுற்றுலா தளத்தில் சட்ட விரோத செயற்பாடு; ரவிகரன் எம்.பி உடனடி நடவடிக்கை முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் புலிபாஞ்சகல் சுற்றுலா ஒதுக்கிடத்தில்  மீனவர்கள் சிலர் சட்டவிரோதமான முறையில் மீனவ வாடி அமைத்துள்ளதுடன், கடற்கரையில் சட்டவிரோதமாக படகுகளையும் நிறுத்தியுள்ளனர்.இந் நிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய், புலிபாய்ஞ்ச கல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில்  மீனவர்கள் சிலர் அத்துமீறி சட்டவிரோதமான முறையில் வாடி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன், சட்டவிரோதமான முறையில் கடற்கரையில் படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இது தொடர்பில்   கிடைத்த முறைப்பாட்டையடுத்து,  குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆராய்ந்தார்.இதன்போது புலிபாய்ஞ்சகல்லில் சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள கடற்கரையை அண்டிய காட்டுப் பகுதியில்  சட்டவிரோதமாக மீனவர்கள் சிலரால் மறைவான வகையில் வாடி அமைக்கப்பட்டிருப்பதுடன்  OFFRP-A-0742MLT, OFFRP-A-1000MLT, OFFRP-A-0974MLT ஆகிய  முல்லைத்தீவு மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட மூன்று படகுகளும், OFFRP-A-5017NBO, OFFRP-A-4478NBO ஆகிய நீர்கொழும்பு மாவட்டத்தின் பதிவிலக்கங்களையுடைய இரு படகுகளும், OFFRP-A-5491CHW, OFFRP-A-7209CHW ஆகிய சிலாபம் மாவட்டத்தின் பதிவிலக்கங்களைக் கொண்ட இரு படகுகளுமாக மொத்தம் ஏழு படகுகள் சட்டவிரோதமான வகையில் புலிபாஞ்சகல் கடற்கரையில்  மீனவர்கள் சிலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை  இனங்காண முடிந்துள்ளது.இந்நிலையில் குறித்த பகுதிக்குரிய கிராம அலுவலர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணிஉத்தியோகத்தர்,பிரதேச செயலாளர்  ஆகியோருக்கு  சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு  எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்  தெரிவிக்கப்பட்டது.அந்தவகையில் குறித்த புலிபாஞ்சகல்  பகுதியென்பது சுற்றுலாத் தலத்திற்கென ஒதுக்கப்பட்ட பகுதியெனவும், அங்கு இவ்வாறான  செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாதெனவும் , குறித்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கெதிராக உரிய வகையில் சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென மாவட்ட செயலாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement