• Apr 26 2026

நாட்டை நிர்வகிக்க தெரியாவிட்டால் தமிழர் தேசத்தை தமிழர்களிடம் கையளியுங்கள் - தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கோரிக்கை!

shanu / Mar 28th 2026, 2:47 pm
image

நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிர்வாக சவால்களை சமாளிக்க முடியாமல் தள்ளாடும் அரச இயந்திரமே தற்போது காணப்படுகிறது.


அது பல்வேறு விடயங்கள் மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் (ச.கீதன்) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில் எரிபொருள் முகாமைத்துவம் முறையாக செயற்படுத்தபடாமல் கடந்த அரசு கையாண்ட அதே வழிமுறையை பிரதி செய்து பயன்படுத்துவதிலும் இந்த அரசு தோல்வி கண்டுள்ளது.


நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத் துறையினருக்கு எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியாமல் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல்பாட்டினை இந்த அரசு மேற்கொண்டு வருவதுடன் இன்னும் பல நிர்வாக குறைபாடுகளையும் நிவர்த்திக்க முடியாமல் தள்ளாடுகிறது.


ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சி ஏறிய அரசு பல்வேறு ஊழல்களுக்கு துணை போவதுடன் பாரிய ஊழல் மோசடிகளையும் மேற்கொண்டு வருகின்றது.


உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக பொருத்தமற்ற சில கைதுகளை மேற்கொண்டு வருகிறது. 


அத்தோடு தேர்தல் வாக்குறுதியில் மாகாண சபை தேர்தல்கள் நடாத்தப்படும் என உறுதி அளித்த இந்த அரசு தற்போது தங்கள் மக்கள் செல்வாக்கின் வீழ்ச்சியை கண்டு தேர்தல்களையும் இழுத்தடித்து வருகின்றனர்.


இவ்வாறு இந்த அரசு தொடர்ந்து இதே குறைபாட்டுடன் நாட்டை நிர்வகிக்க அனுமதிக்க முடியாது.


எனவே நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் தமிழர் தேசத்தை அங்கீகரித்து கடந்த காலத்தில் எவ்வாறு தமிழர்கள் தாங்கள் தங்கள் தேசத்தை  நிர்வகித்தார்களோ அதுபோல மீண்டும் நிர்வகிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

நாட்டை நிர்வகிக்க தெரியாவிட்டால் தமிழர் தேசத்தை தமிழர்களிடம் கையளியுங்கள் - தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை கோரிக்கை நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிர்வாக சவால்களை சமாளிக்க முடியாமல் தள்ளாடும் அரச இயந்திரமே தற்போது காணப்படுகிறது.அது பல்வேறு விடயங்கள் மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் (ச.கீதன்) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் எரிபொருள் முகாமைத்துவம் முறையாக செயற்படுத்தபடாமல் கடந்த அரசு கையாண்ட அதே வழிமுறையை பிரதி செய்து பயன்படுத்துவதிலும் இந்த அரசு தோல்வி கண்டுள்ளது.நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத் துறையினருக்கு எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியாமல் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல்பாட்டினை இந்த அரசு மேற்கொண்டு வருவதுடன் இன்னும் பல நிர்வாக குறைபாடுகளையும் நிவர்த்திக்க முடியாமல் தள்ளாடுகிறது.ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சி ஏறிய அரசு பல்வேறு ஊழல்களுக்கு துணை போவதுடன் பாரிய ஊழல் மோசடிகளையும் மேற்கொண்டு வருகின்றது.உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக பொருத்தமற்ற சில கைதுகளை மேற்கொண்டு வருகிறது. அத்தோடு தேர்தல் வாக்குறுதியில் மாகாண சபை தேர்தல்கள் நடாத்தப்படும் என உறுதி அளித்த இந்த அரசு தற்போது தங்கள் மக்கள் செல்வாக்கின் வீழ்ச்சியை கண்டு தேர்தல்களையும் இழுத்தடித்து வருகின்றனர்.இவ்வாறு இந்த அரசு தொடர்ந்து இதே குறைபாட்டுடன் நாட்டை நிர்வகிக்க அனுமதிக்க முடியாது.எனவே நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் தமிழர் தேசத்தை அங்கீகரித்து கடந்த காலத்தில் எவ்வாறு தமிழர்கள் தாங்கள் தங்கள் தேசத்தை  நிர்வகித்தார்களோ அதுபோல மீண்டும் நிர்வகிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement