• Apr 25 2026

தனித்தனியாக பிரிக்க நினைத்தால் அரணாக இணைந்து செயற்படுவோம் ; எதிர்க்கட்சியினரை எச்சரித்த அமைச்சர் சந்திரசேகர்!

shanu / Jan 6th 2026, 6:20 pm
image

எங்களை தனித்தனியாக பிரித்து தாக்கலாம் என நினைத்தால் அது ஒரு போதும் ஈடேறாது. மாறாக எங்கள் ஜனாதிபதி, பிரதமர், அமைசசர், உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ள ஓர் குடும்பமாக, ஒரு அரணாக, ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என்று கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 


பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களையும் பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் தாக்கும் விதமாக அவதூறான கருத்துக்களை முன்வைத்தனர். 


இதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


இங்குள்ள 50 வீதமானோர் எமது அமைச்சர்களையும் உறுப்பினர்களையும் அதுமட்டுமன்றி பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் அவதூறாகப் பேசினார்கள். இவ்வாறு செயற்படுவதன் மூலம் எங்களைப் பிரிக்கலாம் என நினைக்கின்றார்கள். 


எங்களை தனித்தனியாக பிரித்து தாக்கலாம் என நினைத்தால் அது ஒரு போதும் ஈடேறாது. மாறாக எங்கள் ஜனாதிபதி, பிரதமர், அமைசசர், உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ள ஓர் குடும்பமாக, ஒரு அரணாக, ஒன்றாக இணைந்து செயற்படுவோம். எனத் தெரிவித்தார். 

தனித்தனியாக பிரிக்க நினைத்தால் அரணாக இணைந்து செயற்படுவோம் ; எதிர்க்கட்சியினரை எச்சரித்த அமைச்சர் சந்திரசேகர் எங்களை தனித்தனியாக பிரித்து தாக்கலாம் என நினைத்தால் அது ஒரு போதும் ஈடேறாது. மாறாக எங்கள் ஜனாதிபதி, பிரதமர், அமைசசர், உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ள ஓர் குடும்பமாக, ஒரு அரணாக, ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என்று கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களையும் பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் தாக்கும் விதமாக அவதூறான கருத்துக்களை முன்வைத்தனர். இதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இங்குள்ள 50 வீதமானோர் எமது அமைச்சர்களையும் உறுப்பினர்களையும் அதுமட்டுமன்றி பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் அவதூறாகப் பேசினார்கள். இவ்வாறு செயற்படுவதன் மூலம் எங்களைப் பிரிக்கலாம் என நினைக்கின்றார்கள். எங்களை தனித்தனியாக பிரித்து தாக்கலாம் என நினைத்தால் அது ஒரு போதும் ஈடேறாது. மாறாக எங்கள் ஜனாதிபதி, பிரதமர், அமைசசர், உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ள ஓர் குடும்பமாக, ஒரு அரணாக, ஒன்றாக இணைந்து செயற்படுவோம். எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement