• Apr 17 2026

சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் - கணிதப் பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி!

shanu / Apr 1st 2026, 10:10 pm
image

சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் என கணிதப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி நதீரா  அற்புதராஜா தெரிவித்துள்ளார்.


அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், கணிதப் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில்  முதல் நிலையை பெற்றுள்ளேன். 


நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள். மற்றும் பாடசாலை சமூகத்திற்கு  நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன். 


இந்த வெற்றிக்கு அயராது உழைத்த எனது ஆசிரியர்களுக்கும் சக நண்பர்களுக்கும் நன்றிகள். 


பல கஷ்டங்களுக்கு மத்தியில் ஆய்வுகூட வசதியையும் நூலக வசதியையும் செய்து தந்தமையால் நாம் சிறப்பாக படித்தோம். 


அடுத்து வரும் மாணவர்களுக்கும் அந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும். இந்த பாடசாலைக்கு மேலும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.


நான் இஞ்சினியராக வரவேண்டும் என்பது எனது  விருப்பம்.  இந்த சமுதாயத்திற்கு நல்லதொரு சகபாடியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் - கணிதப் பிரிவில் வவுனியாவில் முதலிடம் பெற்ற மாணவி சமுதாயத்திற்கு ஒரு சக பாடியாக இருக்க விரும்புகிறேன் என கணிதப் பிரிவில் வவுனியா மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி நதீரா  அற்புதராஜா தெரிவித்துள்ளார்.அம் மாணவி மேலும் தெரிவிக்கையில், கணிதப் பிரிவில் நான் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில்  முதல் நிலையை பெற்றுள்ளேன். நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள். மற்றும் பாடசாலை சமூகத்திற்கு  நன்றிகளை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த வெற்றிக்கு அயராது உழைத்த எனது ஆசிரியர்களுக்கும் சக நண்பர்களுக்கும் நன்றிகள். பல கஷ்டங்களுக்கு மத்தியில் ஆய்வுகூட வசதியையும் நூலக வசதியையும் செய்து தந்தமையால் நாம் சிறப்பாக படித்தோம். அடுத்து வரும் மாணவர்களுக்கும் அந்த வசதியை செய்து கொடுக்க வேண்டும். இந்த பாடசாலைக்கு மேலும் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.நான் இஞ்சினியராக வரவேண்டும் என்பது எனது  விருப்பம்.  இந்த சமுதாயத்திற்கு நல்லதொரு சகபாடியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement