• May 18 2026

வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்ற விதம்; மனசாட்சியுடன் சிந்திக்குமாறு கொழும்பு மாநகர மேயருக்கு அழைப்பு

Chithra / Dec 31st 2025, 8:23 pm
image

 கொழும்பு மாநகர சபையின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாக இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் உறுப்பினர்  ரீசா சருக் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இன்றைய வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இதனை நிறைவேற்றியுள்ளது.

கடந்த 22-ஆம் தேதி வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தரப்பு சில எதிர்பாராத பின்னடைவுகளைச் சந்தித்ததாக அவர் விளக்கமளித்தார். 

குறிப்பாக, எதிர்க்கட்சியின் இரண்டு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதுடன், அவர்களின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், ஒரு உறுப்பினரின் மனைவிக்கு ஏற்பட்ட அவசர இதய அறுவை சிகிச்சை காரணமாக அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பெண் உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சியினரை மனசாட்சியுடன் சிந்திக்குமாறு மேயர் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டிய ரீசா சருக், இன்று அதே போன்றதொரு கேள்வியை மேயரை நோக்கி முன்வைத்தார். 

இவ்வாறானதொரு நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்ற விதம் குறித்து மேயர் தனது மனசாட்சியைத் தொட்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி என்ற ரீதியில் தாம் பலவீனமடையவில்லை என்றும், வரும் காலங்களில் மக்களுக்கான பொறுப்புள்ள மற்றும் பலமான எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து செயற்படப் போவதாகவும் ரீசா சருக் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்ற விதம்; மனசாட்சியுடன் சிந்திக்குமாறு கொழும்பு மாநகர மேயருக்கு அழைப்பு  கொழும்பு மாநகர சபையின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாக இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் உறுப்பினர்  ரீசா சருக் ஊடகங்களிடம் பகிர்ந்து கொண்டார்.இன்றைய வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 58 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் கிடைத்ததைத் தொடர்ந்து, ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இதனை நிறைவேற்றியுள்ளது.கடந்த 22-ஆம் தேதி வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சித் தரப்பு சில எதிர்பாராத பின்னடைவுகளைச் சந்தித்ததாக அவர் விளக்கமளித்தார். குறிப்பாக, எதிர்க்கட்சியின் இரண்டு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதுடன், அவர்களின் தொலைபேசிகள் அணைக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலும் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், ஒரு உறுப்பினரின் மனைவிக்கு ஏற்பட்ட அவசர இதய அறுவை சிகிச்சை காரணமாக அவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பெண் உறுப்பினர் ஒருவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததும் இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது என அவர் குறிப்பிட்டார்.முன்னதாக வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டபோது, எதிர்க்கட்சியினரை மனசாட்சியுடன் சிந்திக்குமாறு மேயர் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டிய ரீசா சருக், இன்று அதே போன்றதொரு கேள்வியை மேயரை நோக்கி முன்வைத்தார். இவ்வாறானதொரு நிலையில் இந்த வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்ற விதம் குறித்து மேயர் தனது மனசாட்சியைத் தொட்டுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எவ்வாறாயினும், எதிர்க்கட்சி என்ற ரீதியில் தாம் பலவீனமடையவில்லை என்றும், வரும் காலங்களில் மக்களுக்கான பொறுப்புள்ள மற்றும் பலமான எதிர்க்கட்சியாகத் தொடர்ந்து செயற்படப் போவதாகவும் ரீசா சருக் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement