• May 19 2026

திருமலையில் திடீரென தீப்பற்றிய ஹாட்வெயார்; பெறுமதிமிக்க பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!

shanu / Dec 20th 2025, 8:06 am
image

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்று இன்று (19)தீப்பற்றியுள்ளது.


ஹாட்வெயார் திடீரென தீப்பற்றி எரிந்ததால்  பல பொருட்கள் தீயில் நாசமடைந்துள்ளன. பின்னர் அப்பகுதி   மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 


இதனையடுத்து சம்பவ  இடத்துக்கு திருகோணமலை தீயணைப்பு பிரிவு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து. 


மேலும் இலங்கை மின்சார சபையினரும் குறித்த இடத்துக்கு விஜயம் செய்து குறித்த ஒரு பகுதியின் மின்சாரத்தை துண்டித்துள்ளனர்


தீப் பிடிப்பிற்கான காரணம் மின் ஒழுக்கா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 


 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொஸிஸார் முன்னெடுத்துள்ளனர்.

திருமலையில் திடீரென தீப்பற்றிய ஹாட்வெயார்; பெறுமதிமிக்க பொருட்கள் தீயில் எரிந்து நாசம் திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹாட்வெயார் ஒன்று இன்று (19)தீப்பற்றியுள்ளது.ஹாட்வெயார் திடீரென தீப்பற்றி எரிந்ததால்  பல பொருட்கள் தீயில் நாசமடைந்துள்ளன. பின்னர் அப்பகுதி   மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து சம்பவ  இடத்துக்கு திருகோணமலை தீயணைப்பு பிரிவு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து. மேலும் இலங்கை மின்சார சபையினரும் குறித்த இடத்துக்கு விஜயம் செய்து குறித்த ஒரு பகுதியின் மின்சாரத்தை துண்டித்துள்ளனர்தீப் பிடிப்பிற்கான காரணம் மின் ஒழுக்கா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொஸிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement