மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாக இல்லாமல் தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என எரஇலங்கையில் உள்ள ஜப்பான் தூதர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன், வே. இராதாகிருஷ்ணன், பாரத் அருள்சாமி, பிரஜீவன், ஆகியோர் அடங்கிய தமுகூ பிரதிநிதிகள் குழு, கொழும்பு ஜப்பான் தூதுவர் தலைமையிலான குழுவை கொழும்பு ஜப்பானிய இல்லத்தில் சந்தித்த உரையாடியது. அதன் போது மனோ கணேசன் ஜப்பானிய தூதுவரிடமும், குழுவினரிடமும், மேலும் கூறியதாவது;
ஜப்பானின் அன்பான வரவேற்பின் மத்தியில், எமது மக்கள் சார்பாக உங்கள் நாம் சந்திக்கிறோம்.
இந்நாட்டில், வாழும் சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையக தமிழர் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்கள் குறித்து இனி வரும் காலங்களில் கூடிய கவனம் செலுத்துங்கள். குறிப்பாக தோட்டங்களில் வாழும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் உதவிகளை வ ழங்க தீர்மானியுங்கள்.
எமது மக்களை ஒரு இலங்கை தேசிய இனமாக அடையாளம் காணுங்கள். நாம் இங்கே பல்வேறு துறைகளில் புறக்கணிக்க படுகிறோம். இன்றைய அரசாங்கம் நிறைய பேசுகிறது. ஆனால் அவை செயலில் இன்னமும் வரவில்லை.
ஆகவே, இலங்கைக்கு வரலாறு முழுக்க மிக அதிகமாக உதவிய, உதவுகின்ற, நட்பு நாடான ஜப்பான், தமது உதவிகள், இந்நாட்டில் இன்று மிகவும் பின் தங்கிய மக்களான மலையக தமிழ் மக்களுகளை, சென்று அடைகின்றனவா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாக இல்லாமல் தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் - ஜப்பான் தூதுவரிடம் மனோ கணேசன் மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாக இல்லாமல் தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என எரஇலங்கையில் உள்ள ஜப்பான் தூதர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ கணேசன், வே. இராதாகிருஷ்ணன், பாரத் அருள்சாமி, பிரஜீவன், ஆகியோர் அடங்கிய தமுகூ பிரதிநிதிகள் குழு, கொழும்பு ஜப்பான் தூதுவர் தலைமையிலான குழுவை கொழும்பு ஜப்பானிய இல்லத்தில் சந்தித்த உரையாடியது. அதன் போது மனோ கணேசன் ஜப்பானிய தூதுவரிடமும், குழுவினரிடமும், மேலும் கூறியதாவது; ஜப்பானின் அன்பான வரவேற்பின் மத்தியில், எமது மக்கள் சார்பாக உங்கள் நாம் சந்திக்கிறோம். இந்நாட்டில், வாழும் சுமார் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையக தமிழர் எதிர்கொள்ளும் சமூக-பொருளாதார சவால்கள் குறித்து இனி வரும் காலங்களில் கூடிய கவனம் செலுத்துங்கள். குறிப்பாக தோட்டங்களில் வாழும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு நேரடியாக பயன் அளிக்கும் உதவிகளை வ ழங்க தீர்மானியுங்கள். எமது மக்களை ஒரு இலங்கை தேசிய இனமாக அடையாளம் காணுங்கள். நாம் இங்கே பல்வேறு துறைகளில் புறக்கணிக்க படுகிறோம். இன்றைய அரசாங்கம் நிறைய பேசுகிறது. ஆனால் அவை செயலில் இன்னமும் வரவில்லை. ஆகவே, இலங்கைக்கு வரலாறு முழுக்க மிக அதிகமாக உதவிய, உதவுகின்ற, நட்பு நாடான ஜப்பான், தமது உதவிகள், இந்நாட்டில் இன்று மிகவும் பின் தங்கிய மக்களான மலையக தமிழ் மக்களுகளை, சென்று அடைகின்றனவா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.