• Apr 19 2026

மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து

Chithra / Nov 30th 2025, 7:02 pm
image



அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 


வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.


ஹெலிகொப்டரில் இருந்த இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனையோரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்


மீட்கப்பட்ட இருவரும் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸார் மற்றும் விமானப் படை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.ஹெலிகொப்டரில் இருந்த இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனையோரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எவ்வாறாயினும், மீட்கப்பட்ட இவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்மீட்கப்பட்ட இருவரும் விமானப்படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸார் மற்றும் விமானப் படை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement