வவுனியா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
நேற்று மதியம் திடீரென வீசிய கடும் காற்றினால் வவுனியா நகர், அதனைச் சூழவுள்ள கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கூரைகள் பகுதியளவில் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
வவுனியா நகரின் வர்த்தக நிலையங்கள் பலவற்றின் தகரக் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
திடீர் அனர்த்தம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மதிய நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதால், நகருக்கு வருகை தந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதேவேளை மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, புளியாவத்தை தோட்டத்தில் குடியிருப்புகள் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் வீடுகளுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
நேற்று பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாகவே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
புளியாவத்தை, ஹென்சி தோட்டத்தின் மேல்பகுதியில் நின்றிருந்த பாரிய மரம் ஒன்றே, அங்குள்ள லயன் குடியிருப்புகள் மீது முறிந்து வீழ்ந்துள்ளது.
மரம் வீழ்ந்த சந்தர்ப்பத்தில் குடியிருப்புகளில் மக்கள் இருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகள் குறித்து தோட்ட நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடும் காற்றுடன் பலத்த மழை; தூக்கி வீசப்பட்ட கூரைகள் வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதம் வவுனியா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுநேற்று மதியம் திடீரென வீசிய கடும் காற்றினால் வவுனியா நகர், அதனைச் சூழவுள்ள கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களின் கூரைகள் பகுதியளவில் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.வவுனியா நகரின் வர்த்தக நிலையங்கள் பலவற்றின் தகரக் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டதில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.திடீர் அனர்த்தம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மதிய நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதால், நகருக்கு வருகை தந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேவேளை மலையகத்தில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, புளியாவத்தை தோட்டத்தில் குடியிருப்புகள் மீது பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் வீடுகளுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.நேற்று பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாகவே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது. புளியாவத்தை, ஹென்சி தோட்டத்தின் மேல்பகுதியில் நின்றிருந்த பாரிய மரம் ஒன்றே, அங்குள்ள லயன் குடியிருப்புகள் மீது முறிந்து வீழ்ந்துள்ளது.மரம் வீழ்ந்த சந்தர்ப்பத்தில் குடியிருப்புகளில் மக்கள் இருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் பலத்த சேதமடைந்துள்ளன.பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிகமாக உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகள் குறித்து தோட்ட நிர்வாகத்திற்கும் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழும் அபாயம் குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.