கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 8347 குடும்பங்களைச் சேர்ந்த 30871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப் பிரிவில் 33 கிராம சேவகர் பிரிவில் 8347 குடும்பங்களை சேர்ந்த 30871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், ஆனமடுவ, கருவலகஸ்வெவ, பல்லம, முந்தல் மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 20 கிராம சேவகர் பிரிவில் 8192 குடும்பங்களைச் சேர்ந்த 30340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவில் 27 குடும்பங்களை சேர்ந்த 98 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் , கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் 3 கிராம சேவகர் பிரிவில் 122 குடும்பங்களை சேர்ந்த 409 பேரும் பாதிக்கப்பட்டுள்ளானர்.
அத்தோடு, வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 7 வீடுகளும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 3 வீடுகளும், கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும் என 13 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 6 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 188 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 5 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 128 குடும்பங்களைச் சேர்ந்த 379 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு பாதுகாப்பு மத்திய நிலையத்தில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான சமைத்த உணவு , சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பனவும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார்.
புத்தளத்தில் தொடரும் கனமழை - 30871 பேர் பாதிப்பு கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் அசாதாரண நிலை காரணமாக 8347 குடும்பங்களைச் சேர்ந்த 30871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப் பிரிவில் 33 கிராம சேவகர் பிரிவில் 8347 குடும்பங்களை சேர்ந்த 30871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.புத்தளம் மாவட்டத்தின் புத்தளம், ஆனமடுவ, கருவலகஸ்வெவ, பல்லம, முந்தல் மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 20 கிராம சேவகர் பிரிவில் 8192 குடும்பங்களைச் சேர்ந்த 30340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், ஆனமடுவ பிரதேச செயலாளர் பிரிவில் 5 கிராம சேவகர் பிரிவில் 27 குடும்பங்களை சேர்ந்த 98 பேரும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரும் , கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவில் 2 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் 3 கிராம சேவகர் பிரிவில் 122 குடும்பங்களை சேர்ந்த 409 பேரும் பாதிக்கப்பட்டுள்ளானர்.அத்தோடு, வெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 7 வீடுகளும், வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவில் 3 வீடுகளும், கருவலகஸ்வெவ பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வீடும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவில் 2 வீடுகளும் என 13 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 6 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 188 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் 5 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 128 குடும்பங்களைச் சேர்ந்த 379 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு பாதுகாப்பு மத்திய நிலையத்தில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான சமைத்த உணவு , சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பனவும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார்.