• Apr 28 2026

மீசாலையில் ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!

Chithra / Apr 28th 2026, 3:14 pm
image

யாழ்ப்பாணம் - தென்மராட்சி மீசாலை கிழக்கு பிரதேசத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று(28) உரிமையாளர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.


கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில், இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 30 வீட்டுத் திட்டங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.


அந்த வருகையின்போது மீசாலை கிழக்கில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த வீட்டிற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்திருந்தார்.


இந்த நிலையில், இன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் புதிய வீட்டை பயனாளிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தனர்.


இந்த நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


மீசாலையில் ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய வீடு பயனாளிகளிடம் கையளிப்பு யாழ்ப்பாணம் - தென்மராட்சி மீசாலை கிழக்கு பிரதேசத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு இன்று(28) உரிமையாளர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.கடந்த ஜனவரி மாதம் 19ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில், இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 30 வீட்டுத் திட்டங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.அந்த வருகையின்போது மீசாலை கிழக்கில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த வீட்டிற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்திருந்தார்.இந்த நிலையில், இன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் புதிய வீட்டை பயனாளிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தனர்.இந்த நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன், தேசிய மக்கள் சக்தியின் தென்மராட்சி அமைப்பாளர் காராளசிங்கம் பிரகாஷ் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement