• Oct 02 2026

3 வயதில் கின்னஸ் சாதனை-அப்பாவுடன் இணைந்து சிறுமி செய்த அசத்தல்

Ziya / Oct 1st 2026, 5:07 pm
image

வெறும் 3 வயதில், தனது தந்தையுடன் இணைந்து ஹூலா ஹூப் வளையத்துக்குள் சென்று வந்ததில் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமி பெலிசிட்டி ரஷ்.


அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் மற்றும் அவரது 3 வயது மகள் பெலிசிட்டி இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர். 


அதிகாரப்பூர்வ கின்னஸ் பதிவின்படி, 2026 ஆகஸ்ட் 29ஆம் திகதி போய்ஸி நகரில் நடைபெற்ற முயற்சியில், 30 விநாடிகளில் பின்புறமாகச் சுழலும் ஹூலா ஹூப் வளையத்துக்குள் 9 முறை வெற்றிகரமாகச் சென்று வந்துள்ளனர்.


இதற்கு முன்பு இந்தப் பிரிவில் 8 முறை சென்று வந்ததே சாதனையாக இருந்தது. புதிய முயற்சியில் பெலிசிட்டி 10 முறை வளையத்தைக் கடந்து சென்றிருந்தாலும், ஒரு முறை தேவையான தூரம் முழுமையாக பூர்த்தி செய்யப்படாததால் அது செல்லுபடியாகவில்லை. இதையடுத்து 9 செல்லுபடியாகும் முயற்சிகள் புதிய உலக சாதனையாகப் பதிவாகின.


கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த தனது தந்தையின் பயிற்சிகளை பார்த்து வளர்ந்த பெலிசிட்டி, தனக்கும் ஒரு உலக சாதனை வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக டேவிட் ரஷ் தெரிவித்துள்ளார்.


அதன்பின்னர், தந்தையும் மகளும் இணைந்து ஹூலா ஹூப் சவாலுக்குப் பயிற்சி மேற்கொண்டனர்.


ஆனால், சிறுமிக்கு அழுத்தம் கொடுக்காமல், அவள் விரும்பும் நேரத்தில் மட்டுமே பயிற்சி மேற்கொண்டதாக டேவிட் ரஷ் கூறியுள்ளார். அவள் முயற்சி செய்ய விரும்பும்போது முயற்சித்ததாகவும், சோர்வடைந்தால் உடனடியாக நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


டேவிட் ரஷின் மூத்த குழந்தைகளான ஜெரெமி மற்றும் பீட்டரும் ஏற்கனவே கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளனர்.


3 வயதில் கின்னஸ் சாதனை-அப்பாவுடன் இணைந்து சிறுமி செய்த அசத்தல் வெறும் 3 வயதில், தனது தந்தையுடன் இணைந்து ஹூலா ஹூப் வளையத்துக்குள் சென்று வந்ததில் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த சிறுமி பெலிசிட்டி ரஷ்.அமெரிக்காவின் ஐடஹோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் மற்றும் அவரது 3 வயது மகள் பெலிசிட்டி இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர். அதிகாரப்பூர்வ கின்னஸ் பதிவின்படி, 2026 ஆகஸ்ட் 29ஆம் திகதி போய்ஸி நகரில் நடைபெற்ற முயற்சியில், 30 விநாடிகளில் பின்புறமாகச் சுழலும் ஹூலா ஹூப் வளையத்துக்குள் 9 முறை வெற்றிகரமாகச் சென்று வந்துள்ளனர்.இதற்கு முன்பு இந்தப் பிரிவில் 8 முறை சென்று வந்ததே சாதனையாக இருந்தது. புதிய முயற்சியில் பெலிசிட்டி 10 முறை வளையத்தைக் கடந்து சென்றிருந்தாலும், ஒரு முறை தேவையான தூரம் முழுமையாக பூர்த்தி செய்யப்படாததால் அது செல்லுபடியாகவில்லை. இதையடுத்து 9 செல்லுபடியாகும் முயற்சிகள் புதிய உலக சாதனையாகப் பதிவாகின.கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த தனது தந்தையின் பயிற்சிகளை பார்த்து வளர்ந்த பெலிசிட்டி, தனக்கும் ஒரு உலக சாதனை வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக டேவிட் ரஷ் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர், தந்தையும் மகளும் இணைந்து ஹூலா ஹூப் சவாலுக்குப் பயிற்சி மேற்கொண்டனர்.ஆனால், சிறுமிக்கு அழுத்தம் கொடுக்காமல், அவள் விரும்பும் நேரத்தில் மட்டுமே பயிற்சி மேற்கொண்டதாக டேவிட் ரஷ் கூறியுள்ளார். அவள் முயற்சி செய்ய விரும்பும்போது முயற்சித்ததாகவும், சோர்வடைந்தால் உடனடியாக நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.டேவிட் ரஷின் மூத்த குழந்தைகளான ஜெரெமி மற்றும் பீட்டரும் ஏற்கனவே கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement