• Oct 14 2026

திருகோணமலையில் பள்ளிவாயல் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு

Aathira / Oct 13th 2026, 8:26 am
image

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பள்ளிவாயல் மேம்பாடு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு நேற்று முன்தினம் சோனகவாடி முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர், மாவட்ட மேலதிகப் பதிவாளர், காழி நீதிபதி, முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள், ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, 

பள்ளிவாயல்களின் மேம்பாடு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பான சட்டரீதியான நடைமுறைகள் குறித்து விளக்கங்களையும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.

பள்ளிவாயல்களின் நிர்வாகச் செயற்பாடுகளை முறையாக முன்னெடுத்தல், நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துதல், உரிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவாக, விவாகரத்து தொடர்பான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் மூலம் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் தொடர்புடைய துறைசார் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன், பள்ளிவாயல்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும் சமூகத்திற்கான சேவைகளை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.


திருகோணமலையில் பள்ளிவாயல் நிர்வாக நடைமுறைகள் தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாயல்களின் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான பள்ளிவாயல் மேம்பாடு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு நேற்று முன்தினம் சோனகவாடி முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர், மாவட்ட மேலதிகப் பதிவாளர், காழி நீதிபதி, முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள், ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் பள்ளிவாசல் சம்மேளனப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பள்ளிவாயல்களின் மேம்பாடு, நிர்வாக நடைமுறைகள் மற்றும் முஸ்லிம் விவாக, விவாகரத்து தொடர்பான சட்டரீதியான நடைமுறைகள் குறித்து விளக்கங்களையும் வழிகாட்டல்களையும் வழங்கினர்.பள்ளிவாயல்களின் நிர்வாகச் செயற்பாடுகளை முறையாக முன்னெடுத்தல், நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துதல், உரிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விவாக, விவாகரத்து தொடர்பான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வின் மூலம் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கும் தொடர்புடைய துறைசார் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதுடன், பள்ளிவாயல்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்துவதற்கும் சமூகத்திற்கான சேவைகளை மேலும் சிறப்பாக முன்னெடுப்பதற்கும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement