• Oct 03 2026

வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம்!

dorin / Oct 2nd 2026, 1:47 pm
image

வடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களம், தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் இணைந்து நடத்தும் 'தொழில்துறை வர்த்தக சந்தை' இன்று வவுனியா மாநகரசபை மைதான வளாகத்தில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வர்த்தக சந்தையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி பிரதம செயலாளர் திருமதி அனற்  டினேஸ், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர வடக்கு மாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி  ஏ. அன்ரன் யோகநாயகம்,, வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன், அரச அதிகாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்தையானது சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிக்கவும், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் பிரமாண்ட தொழில்துறை வர்த்தக சந்தை ஆரம்பம் வடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களம், தேசிய அருங்கலைகள் பேரவை மற்றும் வவுனியா மாவட்ட செயலகம் இணைந்து நடத்தும் 'தொழில்துறை வர்த்தக சந்தை' இன்று வவுனியா மாநகரசபை மைதான வளாகத்தில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.வடக்கு மாகாண தொழில்துறைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.கிருஷ்ணேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வர்த்தக சந்தையினை திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் உதவி பிரதம செயலாளர் திருமதி அனற்  டினேஸ், வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத்சந்திர வடக்கு மாகாண மகளீர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி  ஏ. அன்ரன் யோகநாயகம்,, வவுனியா பிரதேச செயலாளர் இ. பிரதாபன், அரச அதிகாரிகள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த சந்தையானது சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிக்கவும், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement