• Apr 23 2026

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்! சபையில் பிரதமர் அறிவிப்பு

Chithra / Jan 7th 2026, 11:04 am
image

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.


இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.


கல்வித் தரத்தைப் பாதுகாக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் இந்த மறுசீரமைப்புப் பணியை முன்னெடுத்துள்ளது. 

 

இதன் மூலம் கல்வி முறையில் காணப்பட்ட ஒரு பெரிய குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம் சபையில் பிரதமர் அறிவிப்பு சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.இன்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.கல்வித் தரத்தைப் பாதுகாக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசாங்கம் இந்த மறுசீரமைப்புப் பணியை முன்னெடுத்துள்ளது.  இதன் மூலம் கல்வி முறையில் காணப்பட்ட ஒரு பெரிய குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement