• Aug 13 2026

போதைப்பொருள், பாதாள உலகத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை சமந்த வித்யாரத்ன

dorin / Aug 12th 2026, 12:26 pm
image

கடந்த காலத்தில் விளையாட்டுத் துறையை சரியாக மேம்படுத்தாததன் விளைவாக, இன்று விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதை விட சிறைச்சாலைகளை பராமரிக்கவும், புதிய சிறை முகாம்களை அமைக்கவுமே அரசாங்கத்திற்கு அதிக நிதி செலவாகி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எனினும், நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலையும் பாதாள உலகக் குழுக்களையும் ஒழித்து சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

முன்னர் "சட்டம் என்பது ஏழை மக்களுக்கு மட்டுமே; செல்வந்தர்களும் அதிகார வர்க்கத்தினரும் தப்பித்துவிடுவார்கள்" என்ற நிலைமையே நாட்டில் நிலவியது. 

ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதுடன், குற்றங்களில் ஈடுபட்ட பலமிக்கவர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் சூழ்ச்சியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு செல்வாக்குமிக்கவர்கள் சிறைக்குச் செல்லத் தொடங்கியுள்ளதால், சிறைச்சாலைகளுக்குள் இருந்தவாறே சாதாரண கைதிகளையும் தூண்டிவிட்டு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். 

இவ்வாறான சதிகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தலைவணங்காது எனவும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்க முழு நாடும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன வலியுறுத்தினார்.

போதைப்பொருள், பாதாள உலகத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை சமந்த வித்யாரத்ன கடந்த காலத்தில் விளையாட்டுத் துறையை சரியாக மேம்படுத்தாததன் விளைவாக, இன்று விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதை விட சிறைச்சாலைகளை பராமரிக்கவும், புதிய சிறை முகாம்களை அமைக்கவுமே அரசாங்கத்திற்கு அதிக நிதி செலவாகி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.எனினும், நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலையும் பாதாள உலகக் குழுக்களையும் ஒழித்து சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்த அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.முன்னர் "சட்டம் என்பது ஏழை மக்களுக்கு மட்டுமே; செல்வந்தர்களும் அதிகார வர்க்கத்தினரும் தப்பித்துவிடுவார்கள்" என்ற நிலைமையே நாட்டில் நிலவியது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளதுடன், குற்றங்களில் ஈடுபட்ட பலமிக்கவர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் சூழ்ச்சியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு செல்வாக்குமிக்கவர்கள் சிறைக்குச் செல்லத் தொடங்கியுள்ளதால், சிறைச்சாலைகளுக்குள் இருந்தவாறே சாதாரண கைதிகளையும் தூண்டிவிட்டு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறான சதிகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் தலைவணங்காது எனவும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிக்க முழு நாடும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement