போர்வீரர்கள் நினைவுத் தூபி அருகே இடம்பெற்ற சம்பவத்தின் அடிப்படையில் தன்னைக் கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதற்றமான சம்பவத்துடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக, தமக்கு பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின்படி, நாளை திங்கட்கிழமை தாம் தலங்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகவும் விமல் வீரவன்ச உறுதிப்படுத்தினார்.
"நாட்டின் சுயாதீனமான அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையில், தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்கள் நினைவுத்தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தவே நாம் அங்கு சென்றோம்.
ஆனால், அந்த உன்னதமான செயலுக்கு அநாவசியமாகத் தடையை ஏற்படுத்திய பாதுகாப்புத் தரப்பினர், இப்போது எங்களை குற்றவாளிகளைப் போல் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு கட்டளையிட்டு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேடைகளில் கூறுகின்றார். ஆனால், நடைமுறையில் அது அவ்வாறு ஒருபோதும் செயற்படவில்லை.
நீதி அமைச்சுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டுள்ள மல்வானை மாளிகையைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக தற்போதைய அரசோ அல்லது பொலிஸாரோ இதுவரை எந்தவொரு சட்டப் படியிலான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. - என தெரிவித்தார்.
தன்னைக் கைது செய்யத் திட்டமிட்டும் அரசு - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு போர்வீரர்கள் நினைவுத் தூபி அருகே இடம்பெற்ற சம்பவத்தின் அடிப்படையில் தன்னைக் கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுத்தூபிக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதற்றமான சம்பவத்துடன் தொடர்புடைய வாக்குமூலத்தை வழங்குவதற்காக, தமக்கு பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின்படி, நாளை திங்கட்கிழமை தாம் தலங்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்று வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகவும் விமல் வீரவன்ச உறுதிப்படுத்தினார்."நாட்டின் சுயாதீனமான அனைத்துக் குடிமக்களுக்கும் உள்ள அடிப்படை உரிமையின் அடிப்படையில், தாய்நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்கள் நினைவுத்தூபிக்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தவே நாம் அங்கு சென்றோம்.ஆனால், அந்த உன்னதமான செயலுக்கு அநாவசியமாகத் தடையை ஏற்படுத்திய பாதுகாப்புத் தரப்பினர், இப்போது எங்களை குற்றவாளிகளைப் போல் வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு கட்டளையிட்டு அறிவித்தல் விடுத்துள்ளனர்.நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேடைகளில் கூறுகின்றார். ஆனால், நடைமுறையில் அது அவ்வாறு ஒருபோதும் செயற்படவில்லை.நீதி அமைச்சுக்குச் சொந்தமானதாக அறிவிக்கப்பட்டுள்ள மல்வானை மாளிகையைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தவர்களுக்கு எதிராக தற்போதைய அரசோ அல்லது பொலிஸாரோ இதுவரை எந்தவொரு சட்டப் படியிலான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. - என தெரிவித்தார்.