• Oct 24 2026

பட்ஜட் தோல்விகளை மூடிமறைக்கும் அரசு.. நாடாளுமன்றத்தில் சஜித் கடும் சாடல்

Aathira / Oct 23rd 2026, 11:39 am
image

2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் பதிலளிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வரவு - செலவுத் திட்ட முன்னேற்றங்கள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாலேயே அதன் முன்னேற்றத்தை அரசு மறைத்து வருகின்றது என்றும் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,

இன்னும் 3 வாரங்களில் 2027 வரவு - செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ள நிலையில், கடந்த 6 மாதங்களாகக் கேள்விகளுக்குப் பதில் தர முடியாமல் போயுள்ளது. இந்த ஆட்சியின் காரணமாக நாடு ஆபத்தான மட்டத்தில் காணப்படுகின்றது என்றார்.

நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர்,

 பாடசாலை அமைப்புக்குள்ளும் போதைப்பொருள் வர்த்தகம் நுழைந்துள்ளதால், இளம் சந்ததியினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதைப் போல் நமது நாட்டிலும் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டும்.

சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்துத் துறைகளின் ஆதரவையும் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என்றார்.

வன ஜீவராசிகள் பாதுகாப்பு குறித்துக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், கல்கமுவ பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த 'காவந்திஸ்ஸ' யானை விவகாரம் குறித்து விளக்கமளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் அடுத்த மிகப்பெரிய யானையான 'மஹாசேன்' யானை மரதன்கடவல பிரதேசத்தில் சுற்றித்திரிந்த நிலையில் தற்போது காணாமல்போயுள்ளது. அக்போ யானையைத் தேட நடவடிக்கை எடுத்தது போல், மஹாசேன் யானையையும் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்.

எஞ்சியுள்ள யானை வளத்தைப் பாதுகாப்பதற்காக முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படை, வனசீவராசிகள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றை ஒன்றிணைத்து பிரத்தியேக படை அணியொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பட்ஜட் தோல்விகளை மூடிமறைக்கும் அரசு. நாடாளுமன்றத்தில் சஜித் கடும் சாடல் 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் பதிலளிக்க முடியாமல் போனது வருத்தமளிக்கின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வரவு - செலவுத் திட்ட முன்னேற்றங்கள் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாலேயே அதன் முன்னேற்றத்தை அரசு மறைத்து வருகின்றது என்றும் குற்றம் சாட்டினார்.நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர்,இன்னும் 3 வாரங்களில் 2027 வரவு - செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ள நிலையில், கடந்த 6 மாதங்களாகக் கேள்விகளுக்குப் பதில் தர முடியாமல் போயுள்ளது. இந்த ஆட்சியின் காரணமாக நாடு ஆபத்தான மட்டத்தில் காணப்படுகின்றது என்றார்.நாட்டில் வேகமாகப் பரவிவரும் போதைப்பொருள் விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், பாடசாலை அமைப்புக்குள்ளும் போதைப்பொருள் வர்த்தகம் நுழைந்துள்ளதால், இளம் சந்ததியினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதைப் போல் நமது நாட்டிலும் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டும்.சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்துத் துறைகளின் ஆதரவையும் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என்றார்.வன ஜீவராசிகள் பாதுகாப்பு குறித்துக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், கல்கமுவ பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த 'காவந்திஸ்ஸ' யானை விவகாரம் குறித்து விளக்கமளித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையில் இருக்கும் அடுத்த மிகப்பெரிய யானையான 'மஹாசேன்' யானை மரதன்கடவல பிரதேசத்தில் சுற்றித்திரிந்த நிலையில் தற்போது காணாமல்போயுள்ளது. அக்போ யானையைத் தேட நடவடிக்கை எடுத்தது போல், மஹாசேன் யானையையும் விரைந்து கண்டுபிடிக்க வேண்டும்.எஞ்சியுள்ள யானை வளத்தைப் பாதுகாப்பதற்காக முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படை, வனசீவராசிகள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றை ஒன்றிணைத்து பிரத்தியேக படை அணியொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement