சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக இதழான ஞான சுடர் 341 வது இதழ் வெளியீட்டு நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில், இடம்பெற்றது.
இதில் வெளியீட்டுரையினை சைவ புலவர் அமிர்தகலா சுதர்சனும், மதிப்பீட்டுரையினை கலாநிதி துரை கணேசமூர்த்தியும் நிகழ்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
உதவித் திட்டங்களாக வட்டுதெற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த யா/வட்டு கார்த்திகேய வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவிக்கு 51,750 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டி ஒன்றும், கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை முருகழூர்த்தி ஆலய நிகழ்வுக்காக, அன்னதானப் பொருட்களும், 25,000 ரூபா நிதியும் வழங்கிவைக்கப்பட்டன.
இவ் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சிறப்பு பிரதி பெற வந்தோர் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சந்நிதியான் ஆச்சிரமத்தின் ஞானச்சுடர் - 342 வெளியீடு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக இதழான ஞான சுடர் 341 வது இதழ் வெளியீட்டு நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில், இடம்பெற்றது.இதில் வெளியீட்டுரையினை சைவ புலவர் அமிர்தகலா சுதர்சனும், மதிப்பீட்டுரையினை கலாநிதி துரை கணேசமூர்த்தியும் நிகழ்தினர். அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன. உதவித் திட்டங்களாக வட்டுதெற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த யா/வட்டு கார்த்திகேய வித்தியாலயத்தில் தரம் 05 இல் கல்வி கற்கும் மாணவிக்கு 51,750 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டி ஒன்றும், கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை முருகழூர்த்தி ஆலய நிகழ்வுக்காக, அன்னதானப் பொருட்களும், 25,000 ரூபா நிதியும் வழங்கிவைக்கப்பட்டன. இவ் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், அடியவர்கள், ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், சிறப்பு பிரதி பெற வந்தோர் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.