• May 04 2026

அனுர அரசிலும் தொடரும் இனவழிப்பு; நீதி கோரி ஆரம்பித்த துவிச்சக்கரவண்டிப் பயணம் நிறைவு

dorin / Mar 2nd 2026, 10:23 pm
image

இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய துவச்சக்கரவண்டி  பயணமானது பல நாடுகளை கடந்து இன்றையதினம் ஜெனீவா ஜக்கியநாடுகள் மனிதஉரிமைகள் சபைக்கு முன்பாக இன்று நிறைவடைந்துள்ளது. 

18 நாட்களாக இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு பயணம் தொடர்பாக பயணத்தின் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை அரச பயங்கரவாதத்தால்  எமது தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட இனஅழிப்புக்கு நீதிகோரி சர்வதேச நாடுகள் எங்கும் எமக்கான நீதியை கோரி போராடி வருகின்றோம் 

அந்த வகையில் பல நாடுகளை கடந்து பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஈறுளிப்பயணமானது கொலண்ட், பெல்ஜியம் ஜேர்மனி,பிரான்ஸ்,சுவிஸ் ஊடாக இன்றைய நாளில் ஜெனீவாவில் நிறைவு பெற்றுள்ளது 

இந்த மனிதநேய ஈறுளிப்பயணமானது பல சர்வதேச நாடுகளின் ஊடாக பயணத்தை மேற்கொண்டு வரும்போது அந்தந்த நாடுகளில் இருந்த மனிதநேயச்செயற்பாட்டாளர்கள் இணைந்து தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் அவர்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை எமது மக்களுக்காக போராட வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம்.

எமது வடக்கு கிழக்கு தமிழர்தேசம் திட்டமுட்டு அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது 

எங்களுடைய தழிழீழ நில தாயகக்கோட்பாடு இன்று கிவில்ஓயா திட்டத்தினூடாக பிரிக்கப்படவுள்ளது  அதனை சிங்களபேரினவாத அநுரஅரசு முன்னெடுக்கின்றார்கள் அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்


அனுர அரசிலும் தொடரும் இனவழிப்பு; நீதி கோரி ஆரம்பித்த துவிச்சக்கரவண்டிப் பயணம் நிறைவு இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்புக்கு நீதி கோரி கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய துவச்சக்கரவண்டி  பயணமானது பல நாடுகளை கடந்து இன்றையதினம் ஜெனீவா ஜக்கியநாடுகள் மனிதஉரிமைகள் சபைக்கு முன்பாக இன்று நிறைவடைந்துள்ளது. 18 நாட்களாக இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு பயணம் தொடர்பாக பயணத்தின் ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,இலங்கை அரச பயங்கரவாதத்தால்  எமது தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட இனஅழிப்புக்கு நீதிகோரி சர்வதேச நாடுகள் எங்கும் எமக்கான நீதியை கோரி போராடி வருகின்றோம் அந்த வகையில் பல நாடுகளை கடந்து பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஈறுளிப்பயணமானது கொலண்ட், பெல்ஜியம் ஜேர்மனி,பிரான்ஸ்,சுவிஸ் ஊடாக இன்றைய நாளில் ஜெனீவாவில் நிறைவு பெற்றுள்ளது இந்த மனிதநேய ஈறுளிப்பயணமானது பல சர்வதேச நாடுகளின் ஊடாக பயணத்தை மேற்கொண்டு வரும்போது அந்தந்த நாடுகளில் இருந்த மனிதநேயச்செயற்பாட்டாளர்கள் இணைந்து தங்களுடைய பங்களிப்பை வழங்கியிருந்தார்கள் அவர்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் வரை எமது மக்களுக்காக போராட வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம்.எமது வடக்கு கிழக்கு தமிழர்தேசம் திட்டமுட்டு அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது எங்களுடைய தழிழீழ நில தாயகக்கோட்பாடு இன்று கிவில்ஓயா திட்டத்தினூடாக பிரிக்கப்படவுள்ளது  அதனை சிங்களபேரினவாத அநுரஅரசு முன்னெடுக்கின்றார்கள் அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement