கடந்த 2026.02.28ஆம் திகதி சனிக்கிழமை ஈரானால் மேற்கொள்ளப்பட்டு வரும் பதில் தாக்குதல் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான பாதுகாப்பற்ற நிலைமைகள் உருவாகி கொண்டு வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு, இலங்கை வெளிவிவகார, வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன், நான் ஒரு இலங்கை பிரஜை மற்றும், இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் உறுப்பினர் என்ற வகையிலும் கீழ் வரும் எனது வேண்டுகோளை இன்று மாலை கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இருவருக்கும் whatsapp மூலம் அனுப்பி வைத்திருக்கின்றேன் என கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.பஸீர் தெரிவித்துள்ளார்.
O1)சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் வழியாக தொழிலாளர்களின் பாதுகாப்பு நிலையை அவசரமாக மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுத்தல்.
02)அவசர சூழ்நிலைகளில் தொடர்பு கொள்ளக்கூடிய 24 மணி நேர உதவி மையங்களை செயல்படுத்துதல்.
03)அதிக ஆபத்து காணப்படும் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்.
04)தேவையான சூழ்நிலையில் உடனடி மேல் பிரவேச திட்டங்களை முன்கூட்டியே செயல்படுத்துதல்.
05)தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நிலைமை தொடர்பான அதிகார பூர்வ தகவல்களை முறையாக அறிவித்தல்.
மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பிரச்சனையாக .இது இருப்பதனால் தங்கள் கவனத்துடன் நடவடிக்கை எடுத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வீர்கள் என நம்புகின்றேன்.
வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் கடந்த 2026.02.28ஆம் திகதி சனிக்கிழமை ஈரானால் மேற்கொள்ளப்பட்டு வரும் பதில் தாக்குதல் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான பாதுகாப்பற்ற நிலைமைகள் உருவாகி கொண்டு வருகிறது.இதனை கருத்தில் கொண்டு, இலங்கை வெளிவிவகார, வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.அத்துடன், நான் ஒரு இலங்கை பிரஜை மற்றும், இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் உறுப்பினர் என்ற வகையிலும் கீழ் வரும் எனது வேண்டுகோளை இன்று மாலை கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இருவருக்கும் whatsapp மூலம் அனுப்பி வைத்திருக்கின்றேன் என கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.பஸீர் தெரிவித்துள்ளார்.O1)சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் வழியாக தொழிலாளர்களின் பாதுகாப்பு நிலையை அவசரமாக மதிப்பீடு செய்ய நடவடிக்கை எடுத்தல்.02)அவசர சூழ்நிலைகளில் தொடர்பு கொள்ளக்கூடிய 24 மணி நேர உதவி மையங்களை செயல்படுத்துதல்.03)அதிக ஆபத்து காணப்படும் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருத்தல்.04)தேவையான சூழ்நிலையில் உடனடி மேல் பிரவேச திட்டங்களை முன்கூட்டியே செயல்படுத்துதல்.05)தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நிலைமை தொடர்பான அதிகார பூர்வ தகவல்களை முறையாக அறிவித்தல்.மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச பிரச்சனையாக .இது இருப்பதனால் தங்கள் கவனத்துடன் நடவடிக்கை எடுத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வீர்கள் என நம்புகின்றேன்.