• Jun 05 2026

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

Chithra / Jun 4th 2026, 1:15 pm
image

மத்திய கிழக்கு நெருக்கடியின் பின்விளைவுகளைச் சமாளிக்கும் வகையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு மேலும் 500 தொன் டீசல் நுகர்வை அவசரமாகக் குறைக்க வேண்டும். ஆனால் அதற்கான குறிப்பிட்ட நடவடிக்கை எதுவும் இதுவரையும் ஒப்புக்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக கூறியுள்ளார்.


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,


ஏனைய பல நாடுகளைப் போலவே, இலங்கையும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் போராடி வருகிறது.


கியூஆர் குறியீட்டு முறையின் கீழ் விநியோகம் சீரமைக்கப்பட்ட பின்னர் தினசரி டீசல் நுகர்வு சராசரியாக சுமார் 4200 தொன்களாக உள்ளது. அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காக, இந்த நுகர்வை மேலும் குறைந்தபட்சம் 500 தொன்கள் குறைக்க வேண்டும்.


இருப்பினும், இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட நடவடிக்கையையும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


மத்திய கிழக்கு போரின் விளைவாக உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் மாதாந்திர எரிபொருள் இறக்குமதிச் செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. இது நாட்டின் கையிருப்பு மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  

எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு மத்திய கிழக்கு நெருக்கடியின் பின்விளைவுகளைச் சமாளிக்கும் வகையில் அரசாங்கம் ஒரு நாளைக்கு மேலும் 500 தொன் டீசல் நுகர்வை அவசரமாகக் குறைக்க வேண்டும். ஆனால் அதற்கான குறிப்பிட்ட நடவடிக்கை எதுவும் இதுவரையும் ஒப்புக்கொள்ளப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக கூறியுள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,ஏனைய பல நாடுகளைப் போலவே, இலங்கையும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளால் போராடி வருகிறது.கியூஆர் குறியீட்டு முறையின் கீழ் விநியோகம் சீரமைக்கப்பட்ட பின்னர் தினசரி டீசல் நுகர்வு சராசரியாக சுமார் 4200 தொன்களாக உள்ளது. அந்நியச் செலாவணியைச் சேமிப்பதற்காக, இந்த நுகர்வை மேலும் குறைந்தபட்சம் 500 தொன்கள் குறைக்க வேண்டும்.இருப்பினும், இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு குறிப்பிட்ட நடவடிக்கையையும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.மத்திய கிழக்கு போரின் விளைவாக உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் மாதாந்திர எரிபொருள் இறக்குமதிச் செலவு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது. இது நாட்டின் கையிருப்பு மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement