இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலாத் துறைக்கான விசேட எரிபொருள் QR முறைமை முழுமையாகச் செயற்படாததால், சுற்றுலா வழிகாட்டிகளும் பயணிகளும் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள மார்ச் 17 முதல் இந்த வசதி வழங்கப்பட்ட போதிலும், பல இடங்களில் இது தோல்வியடைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை பல சுற்றுலா வாகனங்களின் QR குறியீடுகள் வேலை செய்யவில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கியூ.ஆர். குறியீடு வேலை செய்யாதபோது, அச்சிடப்பட்ட QR கடிதத்தை எரிபொருள் நிலையங்களில் சமர்ப்பித்து எரிபொருளைப் பெற முடியும்.
இந்த மாற்று வழிமுறை குறித்த விபரங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால், பல வாகன சாரதிகள் மற்றும் எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கு இது குறித்த புரிதல் இல்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு காவல்துறை மா அதிபரிடம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பல எரிபொருள் நிலையங்களில் கடமையிலுள்ள காவல்துறையினர் மற்றும் ஊழியர்களுக்கு இது குறித்த அறிவுறுத்தல்கள் சென்றடையவில்லை.
வாழைச்சேனை போன்ற பகுதிகளில் QR குறியீடு வேலை செய்யாததால் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனங்களுக்கு எரிபொருள் மறுக்கப்பட்டுள்ளது. பின்னர் சுற்றுலா அதிகாரிகளின் தலையீட்டிற்கு பின்னரே எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
அவசர உதவிகளுக்காக இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள சிபெட்கோ அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் பல வேலை செய்வதில்லை என சுற்றுலா நிறுவன மேலாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், நீர்கொழும்பு, தம்புள்ளை, கண்டி மற்றும் பண்டாரவளை போன்ற பகுதிகளில் சில சுற்றுலா வாகனங்களுக்கு எவ்வித சிக்கலும் இன்றி எரிபொருள் கிடைத்துள்ளதாக வழிகாட்டிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உடனடியாகத் தலையிட வேண்டும் எனத் துறை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலாத் துறைக்கான எரிபொருள் QR முறையில் குளறுபடி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலாத் துறைக்கான விசேட எரிபொருள் QR முறைமை முழுமையாகச் செயற்படாததால், சுற்றுலா வழிகாட்டிகளும் பயணிகளும் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் வழிகாட்டிகளுக்கு வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள மார்ச் 17 முதல் இந்த வசதி வழங்கப்பட்ட போதிலும், பல இடங்களில் இது தோல்வியடைந்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை பல சுற்றுலா வாகனங்களின் QR குறியீடுகள் வேலை செய்யவில்லை என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கியூ.ஆர். குறியீடு வேலை செய்யாதபோது, அச்சிடப்பட்ட QR கடிதத்தை எரிபொருள் நிலையங்களில் சமர்ப்பித்து எரிபொருளைப் பெற முடியும்.இந்த மாற்று வழிமுறை குறித்த விபரங்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால், பல வாகன சாரதிகள் மற்றும் எரிபொருள் நிலைய ஊழியர்களுக்கு இது குறித்த புரிதல் இல்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சுற்றுலா வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு காவல்துறை மா அதிபரிடம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்திருந்த போதிலும், பல எரிபொருள் நிலையங்களில் கடமையிலுள்ள காவல்துறையினர் மற்றும் ஊழியர்களுக்கு இது குறித்த அறிவுறுத்தல்கள் சென்றடையவில்லை.வாழைச்சேனை போன்ற பகுதிகளில் QR குறியீடு வேலை செய்யாததால் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற வாகனங்களுக்கு எரிபொருள் மறுக்கப்பட்டுள்ளது. பின்னர் சுற்றுலா அதிகாரிகளின் தலையீட்டிற்கு பின்னரே எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.அவசர உதவிகளுக்காக இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள சிபெட்கோ அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் பல வேலை செய்வதில்லை என சுற்றுலா நிறுவன மேலாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.எவ்வாறாயினும், நீர்கொழும்பு, தம்புள்ளை, கண்டி மற்றும் பண்டாரவளை போன்ற பகுதிகளில் சில சுற்றுலா வாகனங்களுக்கு எவ்வித சிக்கலும் இன்றி எரிபொருள் கிடைத்துள்ளதாக வழிகாட்டிகள் தெரிவித்துள்ளனர்.இந்தத் திட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உடனடியாகத் தலையிட வேண்டும் எனத் துறை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.