வெசாக் பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாட்டுக்காக அரசாங்கம் விதித்திருந்த சில விதிமுறைகளை தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டு பணிகள் மற்றும் வெசாக் காலப்பகுதியில் மின்சார பயன்பாடு தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, வெசாக் வலய ஏற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவும், அதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகளின் விபரங்களை ஒருங்கிணைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை, வெசாக் பண்டிகை காலத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் வள நெருக்கடியை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவில், கொள்கை வழிபாட்டிற்கு முன்னுரிமை அளித்து, ஆமிச வழிபாடுகள் மூலம் பக்தர்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் வெசாக் வலயத்தை அலங்கரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்முறை புத்த ரஷ்மி வெசாக் வலயம் தினமும் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெசாக் பண்டிகைக்காக தளர்த்தப்படும் எரிபொருள், மின்சார விதிமுறைகள் வெசாக் பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாட்டுக்காக அரசாங்கம் விதித்திருந்த சில விதிமுறைகளை தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டு பணிகள் மற்றும் வெசாக் காலப்பகுதியில் மின்சார பயன்பாடு தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்றது.இதன்போது, வெசாக் வலய ஏற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவும், அதற்காக நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகளின் விபரங்களை ஒருங்கிணைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அதேவேளை, வெசாக் பண்டிகை காலத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் வள நெருக்கடியை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவில், கொள்கை வழிபாட்டிற்கு முன்னுரிமை அளித்து, ஆமிச வழிபாடுகள் மூலம் பக்தர்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் வெசாக் வலயத்தை அலங்கரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்துள்ளார்.மேலும், இம்முறை புத்த ரஷ்மி வெசாக் வலயம் தினமும் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.