• May 03 2026

இலங்கையில் இனி பலத்த மின்னலுடன் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

Chithra / May 3rd 2026, 3:28 pm
image


நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன இன்று (03) இது தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில், இந்த மாத இறுதியளவில் மின்னலுடன் கூடிய மேகங்கள் உருவாகும் சாத்தியம் குறையக்கூடும் எனத் தெரிவித்தார்.


இந்தக் காலப்பகுதியில் மேகங்கள் மூலமே மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. எனவே, பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. 


மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது மின்சாதனங்களைப் பாதுகாப்பதற்கு, அவற்றை மின் இணைப்பிலிருந்து அகற்றி வைப்பதே மிகவும் பொருத்தமானது.


மின்னல் அனர்த்தங்களைத் தவிர்க்க, மழை பெய்யும் போது திறந்தவெளிகளான வயல்வெளிகள், திறந்த வாகனங்களில் பயணம் செய்தல் மற்றும் உயர்ந்த மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


அடுத்ததாக தென்மேற்கு பருவமழை காலம் மே 25 ஆம் திகதிக்கு பின்னரே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பருவமழை காலத்தில் காற்று ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசுவதால், மின்னல் மேகங்கள் உருவாகும் வாய்ப்பு குறையும். 


இடைப் பருவமழை காலத்திலேயே மின்னல் அபாயம் அதிகமாக இருக்கும் எனவும், பருவமழை தொடங்கிய பின் மின்னல் பாதிப்புகள் மற்றும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதேவேளை இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அதன்படி வடமத்திய, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் பதுளை, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இனி பலத்த மின்னலுடன் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன இன்று (03) இது தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில், இந்த மாத இறுதியளவில் மின்னலுடன் கூடிய மேகங்கள் உருவாகும் சாத்தியம் குறையக்கூடும் எனத் தெரிவித்தார்.இந்தக் காலப்பகுதியில் மேகங்கள் மூலமே மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. எனவே, பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது மின்சாதனங்களைப் பாதுகாப்பதற்கு, அவற்றை மின் இணைப்பிலிருந்து அகற்றி வைப்பதே மிகவும் பொருத்தமானது.மின்னல் அனர்த்தங்களைத் தவிர்க்க, மழை பெய்யும் போது திறந்தவெளிகளான வயல்வெளிகள், திறந்த வாகனங்களில் பயணம் செய்தல் மற்றும் உயர்ந்த மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.அடுத்ததாக தென்மேற்கு பருவமழை காலம் மே 25 ஆம் திகதிக்கு பின்னரே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை காலத்தில் காற்று ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி வீசுவதால், மின்னல் மேகங்கள் உருவாகும் வாய்ப்பு குறையும். இடைப் பருவமழை காலத்திலேயே மின்னல் அபாயம் அதிகமாக இருக்கும் எனவும், பருவமழை தொடங்கிய பின் மின்னல் பாதிப்புகள் மற்றும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.இதேவேளை இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.அதன்படி வடமத்திய, மத்திய, சபரகமுவ மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் பதுளை, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement