• Apr 18 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் பிணையில் விடுவிப்பு!

shanu / Aug 22nd 2025, 5:07 pm
image


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார்.



குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான ரணிலை, அவர்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை பிணையில் விடுவித்து நீதிமன்றம் விடுவித்தது.


முன்னாள் ஜனாதிபதி ரணில் பிணையில் விடுவிப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான ரணிலை, அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவரை பிணையில் விடுவித்து நீதிமன்றம் விடுவித்தது.

Advertisement

Advertisement

Advertisement