• May 20 2026

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை

Chithra / Dec 3rd 2025, 11:16 am
image

 

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று  கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் இன்று முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதையடுத்து, அவருக்கு எதிராக கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.


இவ் வழக்கானது, ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் இதனால் அரசுக்கு 09 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டமை தொடர்பாகவும் தொடரப்பட்டதாகும்.  


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை  முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று  கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையால், அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் இன்று முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, அவருக்கு எதிராக கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.இவ் வழக்கானது, ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாகவும் இதனால் அரசுக்கு 09 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டமை தொடர்பாகவும் தொடரப்பட்டதாகும்.  

Advertisement

Advertisement

Advertisement