• Aug 18 2026

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது!

Chithra / Aug 18th 2026, 12:59 pm
image

 

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்ன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.


நாடு முழுவதும் மீன் விற்பனை நிலையங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான பணிகளில் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹீல் சேனாரத்ன, 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரர் கைது  கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்ன, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.நாடு முழுவதும் மீன் விற்பனை நிலையங்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல் தொடர்பான பணிகளில் உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹீல் சேனாரத்ன, 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement