• May 18 2026

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் , சி.ஐ.டியினரால் கைது

dorin / Dec 26th 2025, 7:25 pm
image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, கடந்த 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் மேற்படி  கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த குற்றவாளி 2020 ஆம் ஆண்டு பொலிசாருடனான மோதலில் கொல்லப்பட்டிருந்தார். அவரின் துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறியுள்ளார் என்றும்

விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் தெரிவித்துள்ளது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் , சி.ஐ.டியினரால் கைது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுக்கு கடந்த 2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, கடந்த 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் மேற்படி  கைது செய்யப்பட்டுள்ளார்குறித்த குற்றவாளி 2020 ஆம் ஆண்டு பொலிசாருடனான மோதலில் கொல்லப்பட்டிருந்தார். அவரின் துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறியுள்ளார் என்றும்விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் தெரிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement