• Jun 17 2026

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: கிளிநொச்சியில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

Chithra / Jun 17th 2026, 8:29 am
image


வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.


இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர், குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவர் ஒருவர் நேற்று (16) மதியம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: கிளிநொச்சியில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர், குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவர் ஒருவர் நேற்று (16) மதியம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement