• May 17 2026

யாழில் எலி எச்சங்களுடன் உணவுகள்; சுற்றிவளைத்த அதிகாரிகள்

Chithra / Oct 4th 2025, 3:20 pm
image

 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

வண்டு மொய்ந்த உணவுப்பொருட்கள்,  காலாவதியான  உணவுப்பொருட்கள்,  எலி எச்சங்களுடன் கூடிய உணவுப்பொருட்கள், பூஞ்சணம் மொய்த்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.    

வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. 

இதேவேளை வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சுகாதார விதிமுறைகளை பேணாத உணவகம் மற்றும்  பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவற்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

அதன்போது, மனித நுகர்வுக்கு ஏற்றதல்லாத உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று பல்பொருள் அங்காடிகளுக்கு  எதிராக பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணைகளின் போது உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும்,  பல்பொருள் அங்காடிகளில் உரிமையாளர்களுக்கு 40 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது தீர்ப்பளித்தது. 

யாழில் எலி எச்சங்களுடன் உணவுகள்; சுற்றிவளைத்த அதிகாரிகள்  யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. வண்டு மொய்ந்த உணவுப்பொருட்கள்,  காலாவதியான  உணவுப்பொருட்கள்,  எலி எச்சங்களுடன் கூடிய உணவுப்பொருட்கள், பூஞ்சணம் மொய்த்த உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.    வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளரை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. இதேவேளை வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட சுகாதார விதிமுறைகளை பேணாத உணவகம் மற்றும்  பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவற்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்போது, மனித நுகர்வுக்கு ஏற்றதல்லாத உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று பல்பொருள் அங்காடிகளுக்கு  எதிராக பொது சுகாதார பரிசோதகரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளின் போது உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்த நீதிமன்று, உணவக உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாயும்,  பல்பொருள் அங்காடிகளில் உரிமையாளர்களுக்கு 40 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது தீர்ப்பளித்தது. 

Advertisement

Advertisement

Advertisement