• May 24 2026

அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்! பஅடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்! பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Chithra / May 24th 2026, 9:37 am
image

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பகுதிகளில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், ஆற்றங்கரையோர மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


அத்துடன் சீரற்ற வானிலைக்கு மத்தியில், மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இன்று (24) முற்பகல் 6.00 மணி முதல் நாளை முற்பகல் 6.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல, யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 'கவனமாக இருக்குமாறு' அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும், 

களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புலத்சிங்கள, ஹொரண, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், 

கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்கும், 

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுள்ள, கிரியெல்ல, எலபாத, கலவானை, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 'விழிப்புடன் இருக்குமாறு'  அறிவித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம் பஅடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பகுதிகளில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், ஆற்றங்கரையோர மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.அத்துடன் சீரற்ற வானிலைக்கு மத்தியில், மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இன்று (24) முற்பகல் 6.00 மணி முதல் நாளை முற்பகல் 6.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவான்வெல்ல, யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, அயகம, குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 'கவனமாக இருக்குமாறு' அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புலத்சிங்கள, ஹொரண, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மடுள்ள, கிரியெல்ல, எலபாத, கலவானை, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் 'விழிப்புடன் இருக்குமாறு'  அறிவித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் என  வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement