• Apr 18 2026

பெருந்தொகை தங்கத்துடன் வந்திறங்கிய விமான பணிப்பெண் கட்டுநாயக்கவில் கைது

Chithra / Jan 4th 2026, 2:24 pm
image

சுமார் 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த ஒரு தனியார் விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   

இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

குறித்த பெண் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண் அவர் பணியாற்றிய ஃபிட்ஸ் ஏர் விமானம் ஊடாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.


தனது பயணப் பைக்குள் 1 கிலோ கிராம் மற்றும் 163 கிராம் எடையுடைய நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்துக் கொண்டு கட்டுநாயக்க  விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள விமான ஊழியர்கள் வெளியேறும் வாயிலிலிருந்து  வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணை கைது செய்த கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.   

பெருந்தொகை தங்கத்துடன் வந்திறங்கிய விமான பணிப்பெண் கட்டுநாயக்கவில் கைது சுமார் 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த ஒரு தனியார் விமான நிறுவனத்தின் பெண் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.குறித்த பெண் அவர் பணியாற்றிய ஃபிட்ஸ் ஏர் விமானம் ஊடாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.தனது பயணப் பைக்குள் 1 கிலோ கிராம் மற்றும் 163 கிராம் எடையுடைய நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்துக் கொண்டு கட்டுநாயக்க  விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள விமான ஊழியர்கள் வெளியேறும் வாயிலிலிருந்து  வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணை கைது செய்த கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement