• May 21 2026

பொன்னாலைக் கடலில் மீனவரின் சடலம் மீட்பு; டிட்வா புயலின் கோரம் - யாழில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

shanu / Nov 30th 2025, 2:06 pm
image

டிட்வா புயலின் கோரத்தால் நாட்டின் பல பகுதிகளில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் - பொன்னாலைக் கடலில் மீனவர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 


பொன்னாலையை சேர்ந்த 63 வயதான நாகன் கிருஷ்ணமூர்த்தி எனும் மீனவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.


நேற்று மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்கைக்காக  சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார். 


இந்த நிலையில் குறித்த மீனவர் இன்று பொன்னாலைக் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


டிட்வா புயலின் கோரத்தால் நாடு முழுவதும் 159 பேர் உயிரிழந்த நிலையில் யாழில் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொன்னாலைக் கடலில் மீனவரின் சடலம் மீட்பு; டிட்வா புயலின் கோரம் - யாழில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள் டிட்வா புயலின் கோரத்தால் நாட்டின் பல பகுதிகளில் உயிரிழப்புக்கள் அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் - பொன்னாலைக் கடலில் மீனவர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையை சேர்ந்த 63 வயதான நாகன் கிருஷ்ணமூர்த்தி எனும் மீனவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.நேற்று மாலை பொன்னாலை சிறு கடலில் மீன்பிடி நடவடிக்கைக்காக  சென்ற நிலையில் காணாமல்போயுள்ளார். இந்த நிலையில் குறித்த மீனவர் இன்று பொன்னாலைக் கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிட்வா புயலின் கோரத்தால் நாடு முழுவதும் 159 பேர் உயிரிழந்த நிலையில் யாழில் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement