• May 19 2026

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வோண்டெல்கெர்க் தேவாலயத்தில் தீ விபத்து!

shanu / Jan 1st 2026, 3:07 pm
image

நெதர்லாந்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் தீடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. 



நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வோண்டெல்கெர்க்  தேவாலயத்தில் புத்தாண்டு தினமான இன்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


மலர்ந்திருக்கும் 2026 - புத்தாண்டை வரவேற்கும் முகமாக அனைத்து நாடுகளும் வண்ணமயமான ஏற்பாடுகளை செய்திருந்தன. 


அந்த வகையில் நெதர்லாந்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் புத்தாண்டு வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. 


இதன்போது குறித்த தேவாலயத்தின் உச்சியிலுள்ள கட்டடத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் அங்கு புத்தாண்டு வழிபாடுகள் ஸ்தம்பிக்கப்பட்டது. 


அத்துடன் புத்தாண்டை வரவேற்பதற்காக வழிபாடுகளுக்குச் சென்ற மக்கள் தீ விபத்தால் பதற்றமடைந்து அங்குமிங்குமாக வெளியேறினர். 


புத்தாண்டில் இவ்வாறு தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வோண்டெல்கெர்க் தேவாலயத்தில் தீ விபத்து நெதர்லாந்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் தீடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள வோண்டெல்கெர்க்  தேவாலயத்தில் புத்தாண்டு தினமான இன்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மலர்ந்திருக்கும் 2026 - புத்தாண்டை வரவேற்கும் முகமாக அனைத்து நாடுகளும் வண்ணமயமான ஏற்பாடுகளை செய்திருந்தன. அந்த வகையில் நெதர்லாந்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் புத்தாண்டு வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதன்போது குறித்த தேவாலயத்தின் உச்சியிலுள்ள கட்டடத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் அங்கு புத்தாண்டு வழிபாடுகள் ஸ்தம்பிக்கப்பட்டது. அத்துடன் புத்தாண்டை வரவேற்பதற்காக வழிபாடுகளுக்குச் சென்ற மக்கள் தீ விபத்தால் பதற்றமடைந்து அங்குமிங்குமாக வெளியேறினர். புத்தாண்டில் இவ்வாறு தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement