• May 12 2026

புதுக்குடியிருப்பில் நுண்கலை வகுப்புகள் ஆரம்பம் !

Ziya / May 12th 2026, 3:09 pm
image

புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அந்தவகையில், கலைகள் அருகி வரும் இக்கால கட்டத்தில் பண்பாட்டு பெருவிழாக்கள், விளையாட்டு ஆர்வம் குறைந்து வரும் நிலையில் விளையாட்டு போட்டிகள், அண்மையில் சித்த ஆயுள்வேத மருத்துவ முகாம் போன்ற பல்வேறு சமூக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


அதன் தொடர்ச்சியாக தற்போது நுண்கலை வகுப்புகளும் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தவறான பாதைகளில் செல்லாது, தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்நுண்கலை முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் – ஐக்கிய இராச்சிய கிளை (UOJAAUK) மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை இணைந்து இந்த நுண்கலை வகுப்புகளை நடத்துகின்றன.


ஐக்கிய இராச்சிய யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையில் சங்கீதம், நடனம், மிருதங்கம், தபேலா, கிற்றார், வயலின், கராத்தே மற்றும் ஓகன் போன்ற பாடப்பிரிவுகள் திறமையான ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை வளாகத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பில் நுண்கலை வகுப்புகள் ஆரம்பம் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில், கலைகள் அருகி வரும் இக்கால கட்டத்தில் பண்பாட்டு பெருவிழாக்கள், விளையாட்டு ஆர்வம் குறைந்து வரும் நிலையில் விளையாட்டு போட்டிகள், அண்மையில் சித்த ஆயுள்வேத மருத்துவ முகாம் போன்ற பல்வேறு சமூக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது நுண்கலை வகுப்புகளும் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தவறான பாதைகளில் செல்லாது, தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கில் இந்நுண்கலை முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் – ஐக்கிய இராச்சிய கிளை (UOJAAUK) மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை இணைந்து இந்த நுண்கலை வகுப்புகளை நடத்துகின்றன.ஐக்கிய இராச்சிய யாழ் பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையில் சங்கீதம், நடனம், மிருதங்கம், தபேலா, கிற்றார், வயலின், கராத்தே மற்றும் ஓகன் போன்ற பாடப்பிரிவுகள் திறமையான ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை வளாகத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement